- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சூலம் திசை என்றால் என்ன ? அதற்கான பரிகாரம் என்ன ?

நாம் அனைவருமே தின காலெண்டரை பார்க்கும்போது அதில் சூலம் என்ற வார்த்தை இடம்பெற்று அந்த சூலம் இருக்கும் திசையாக கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சூலம் என்றால் என்ன என்பதையும், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தினமும் சூரியனின் தீட்சணயம் அதிகமாகும் திசை சூலம் திசை என்று குறிப்பிட்டிருகின்றனர் நமது முன்னோர்கள். நமது நாடு ஒரு வெப்ப மண்டல நாடு. எனவே வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் சூரியனின் உக்கிரம் எத்திசையில் அதிகம் இருக்கிறதோ அந்த திசையில் நெடுந்தொலைவு பயணங்கள் மேற்கொள்வதை தடுப்பதற்கு தான் அக்காலங்களில் இந்த சூலம் பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

வழக்கமாக பயணம் செய்பவர்கள், வேலைகள் மற்றும் பணிபுரிய பயணிப்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வைத்தியம் பார்க்க செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள், திருமணம் போன்ற சுபகாரியங்கள் சம்பந்தமான விடயங்களுக்காக வெளியில் செல்பவர்கள் சூலம் திசை பார்த்து செல்வதில் தவறேதுமில்லை. வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசையில் சூலம் ஏற்படுகிறது. அந்த சூல திசைக்கான பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.

சூலம் இருக்கின்ற திசையில் பயணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், சூலத்திசையில் சூரியனின் உச்சகால நேரத்திற்கு பிறகு பயணிப்பது சிறந்தது. சூலத்திசையில் பயணம் செய்வதற்கு முன்பு சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை கூறி சூரியனை வணங்கி விட்டு செல்வதும் நன்மையை தரும். சூலம் ஏற்படும் திசையில் பயணிப்பதற்கு முன்பு அத்திசைக்கு நேரெதிரான திசையில் சிறிது தூரம் பயணித்து, பின்பு சூல திசையில் செல்வது சூல திசையில் பயணிப்பதால் ஏற்படும் தோஷங்களை விலக்கும்.

- Advertisement -

சூலத்திசையில் பயணம் மேற்கொள்ளும் முன்பு அந்த திசைகளுக்குரிய தேவதைகள், திக்பாலகர்கள் ஆகியோரை வணங்கி, ஒவ்வொரு சூலதிசைக்கும் பரிகார பிரசாதங்களாக கூறப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களான வெல்லம், தயிர், எண்ணெய் போன்றவற்றை சிறிது சாப்பிட்டுவிட்டு அந்த திசையில் பயணம் மேற்கொள்வதும் சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
உப்பு பரிகாரம் எப்படி செய்யவேண்டும். அதன் நன்மைகள் என்ன

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Soolam pariharam in Tamil. We also have details about Soolam in astrology and Soolam in Tamil panchangam

- Advertisement -