- Advertisement -
சமையல் குறிப்புகள்

இதுவரைக்கும் எத்தனையோ வெரைட்டி கட்லெட் சாப்பிட்டு இருப்பீங்க, ஆனா இந்த சோயா சங்க்ஸ், கொண்டைக்கடலை சேர்ந்து கட்லெட் சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இனி எல்லா நேரமும் ஈவினிங் ஸ்நாக்ஸ்னா இந்த கட்லெட் தான்.

- Advertisement -

குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல் மேக்கரை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடு வது கிடையாது. அதே போல் தான் கொண்டைக்கடலையும். இது இரண்டிலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனாலும் இந்த உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான கட்லெட்டாக செய்து கொடுத்தால் நல்லது தானே. அப்படி ஒரு சுவையான மீல் மேக்கர், கொண்டைக்கடலை கட்லெட்டை தான் இப்போது இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த கட்லெட் செய்ய முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்வோம். அதற்கு ஒரு கப் அளவு மீல் மேக்கரை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதே போல் ஒரு கப் அளவிற்கு ஊற வைத்த கொண்டைக்கடலை எடுத்து குக்கரில் சேர்த்து நன்றாக வேக வைத்து அதையும் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தண்ணீர் வடித்த மீள் மேக்கர் கொண்டைக்கடலை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள் . இப்போது மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு, பேஸ்ட், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதில் சேர்க்க ஒரு பெரிய வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய் ,கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா என அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி அதையும் இந்த மீல்மேக்கர் கொண்டைக்கடலை கலவையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து, அரை டீஸ்பூன் அமச்சூர் பவுடர் இது கிடைக்கவில்லை என்றால், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டி வைத்த உருண்டைகளை எடுத்து உள்ளங்கையில் லேசாக அழுத்தி கட்லெட் போல செய்து இந்த பேனில் போட்டு இரண்டு புறமும் நன்றாக சிவக்கும் படி திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதை செய்யும் பொழுது அடுப்பை மீடியம் பேலேமில் வைத்துக் கொள்ளுங்கள். தீ அதிகமாக இருந்தால் கட்லெட் கருகி விடும்.

இதை இன்னொரு முறையிலும் செய்யலாம். எண்ணெய் தாராளமாக ஊற்றி இந்த கட்லெட்டை வடை போல பொரித்து எடுத்தும் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போதும் இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

- Advertisement -