
சில பேர் வீடுகளில் சந்தோஷமும் நிம்மதியும் கெட்டுப் போவதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கும். கண் திருஷ்டியால் கூட ஒரு வீட்டில் சுபகாரியங்கள் தடைப்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்வது. சனிக்கிழமை அன்று எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரே ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
பிறகு உங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடையே இருக்காது. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நிற்கும். சுப செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். அது என்ன பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்து விடுவோமா.
ஒரே ஒரு எலுமிச்சம் பழம் தான் இந்த பரிகாரம் செய்வதற்கு தேவை. அந்த பழத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வையுங்கள். பூஜையறையில் விளக்கு ஏற்றுக்கள். இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு, எங்கள் வீட்டில் இருக்கும் மொத்த கண் திருஷ்டியும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும், என்று குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த எலுமிச்சம் பழத்தை ஒவ்வொரு அறையாக கொண்டு சென்று, ஊதுவத்தி காண்பிப்பது போல காட்ட வேண்டும்.
ஒரு மூன்று முறை அப்படியே கையில் வைத்துக் கொண்டு எலுமிச்சம் பழத்தை அந்த அறைக்குள் சுற்றினாலும் தவறு கிடையாது. ஆனால் வீட்டில் இருக்கும் எல்லா அறைக்கும் இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துச் செல்லுங்கள். பிறகு ஒரு கண்ணாடி டம்ளரில் அந்த எலுமிச்சம் பழத்தை போட்டு வரவேற்புரையில் வைத்து விடுங்கள்.
அடுத்த சனிக்கிழமை வரை அந்த எலுமிச்சம் பழம் அப்படியே இருக்கட்டும். காய்ந்தால் தவறு கிடையாது. அந்த வார இடைவெளிக்குள் அந்த பழம் அழுகிவிட்டால், உடனடியாக அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே போட்டு விடுங்கள்.
பழம் அழுகவில்லை காய தொடங்கி விட்டது என்றால், அடுத்த வாரம் சனிக்கிழமை வரை அந்த பழம் அப்படியே இருக்கட்டும். அடுத்த வாரம் சனிக்கிழமை கொஞ்சம், ஒரு கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு பொசிக்கி விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.
இதையும் படிக்கலாமே: கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு எலுமிச்சம் பழத்தை வீட்டில் எல்லாம் மூளை முழுக்குகளிலும், காட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு வைக்க வேண்டும். மறு வாரம் சனிக்கிழமை அதை எடுத்து நெருப்பில் போட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் நிச்சயம் சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.