- Advertisement -
சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் சுவையான கறிவேப்பிலை தொக்கை மிகவும் சுவையாக இவ்வாறு செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவு வகைகளை சமையலில் சேர்த்துக் கொள்வது மிகவும் அத்தியாவசியமான ஒரு விஷயமாகும். அவ்வாறு சமையலில் பெரும்பான்மையான உணவுகளில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒன்றுதான் கருவேப்பிலை. ஒரு இணுக்கு கறிவேப்பிலையையாவது தாளிப்பதற்காக தினமும் பயன்படுத்தி விடுகிறோம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. எந்த அளவவிற்கு கறிவேப்பிலையை நமது உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அவ்வாறு மிகவும் முக்கியமான இந்த கருவேப்பிலையை வைத்து செய்யக்கூடிய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு தொக்கை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை – 4 கைப்பிடி, மிளகு – 3 ஸ்பூன், வரமிளகாய் – 6, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு – 2 ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கருவேப்பிலையை உறுவி கொண்டு அவற்றை சுத்தமாக கழுவி உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 4 கைபிடி கருவேப்பிலையை சேர்த்து அதனுடன் சிறிதளவு புளி, 3 ஸ்பூன் மிளகு மற்றும் 6 வர மிளகாய் சேர்த்து அவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து 200 கிராம் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு நன்றாக பொரிந்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

சிறிது நேரம் நன்றாக கலந்து விட்ட பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு கலந்து கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் கறிவேப்பிலை தொக்கு கொஞ்சம் கெட்டியாக மாறி இதில் சேர்த்துள்ள எண்ணெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

கருவேப்பிலையை இவ்வாறு அரைத்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரையிலும் நன்றாக இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இந்த கருவேப்பிலை தொக்கை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. இதனால் உடலில் இருக்கும் இரத்த குறைபாடு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

- Advertisement -