
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். பலரும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தங்களுடைய ராசியில் எந்தெந்த அமைப்பில் நவக்கிரகங்கள் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபோல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டாவதற்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவர் செய்யக்கூடிய தொழில் சிறப்பாக விளங்க வேண்டும் என்றால் அவருடைய கடின முயற்சியின் பலனாலும் அதே சமயம் நவகிரகங்களின் அருளாலும் தான் நடக்கும். அதே போல் தான் ஒருவருக்கு நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்றாலோ அவருடைய கடின உழைப்போடு நவகிரகங்களின் அருளையும் பெறவேண்டும். அப்படி கிடைத்துவிட்டால் அவர்கள் நினைத்தார் போல் அவர்களுடைய தொழிலோ அல்லது வேலையிலோ நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பொதுவாகவே தடைகள் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய சனீஸ்வர பகவான். சனீஸ்வர பகவானால் தான் தொழிலிலும் வேலையிலும் தடைகளும் முடக்கமும் உண்டாகும். அதனால் பலரும் சனிக்கிழமையில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆனால் தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய முடக்கம் விலகவும் முன்னேற்றம் ஏற்படவும் நாம் சனீஸ்வர பகவானை வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. குரு பகவானின் அருள் இருக்கும் பட்சத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான மங்களங்களும் நடைபெறும் என்று கூறலாம். அதனால் வியாழக்கிழமை அன்று இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய பழங்கால ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் இருக்கும் சனீஸ்வர பகவானுக்கு முன்பாக கண்டிப்பான முறையில் தீபம் ஏற்றுவதற்காக இடத்தை வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் மேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாறு இரண்டு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.
அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கிறது, எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை என்பவர்கள் எட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து சனீஸ்வர பகவானே வழிபாடு செய்துவிட்டு வரவேண்டும். இப்படி அக்டோபர் மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாம் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானின் அருளாலும், குரு பகவானின் அருளாலும் நம்முடைய தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் முற்றிலும் விலகும்.
இதையும் படிக்கலாமே: நினைத்ததை நிறைவேற்றும் தீபம்
நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் தொழில் மற்றும் வேலை தொடர்பான வழிப்பாடாக இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.