- Advertisement -

தடைகளைத் தகர்க்கும் வாராகி மந்திரம்

- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் எதை தொட்டாலும் தோல்வி, தடைகள் தடங்கல்கள், வரும். இழுத்து பிடித்து முக்கால்வாசி கிணறு தாண்டிருவாங்க. ஆனால் கடைசி முயற்சியில் தோல்வி. முயற்சியில் 90% எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும்.

இறுதியாக 10% ஏதோ ஒரு காரணத்தால் தோல்வி அடைந்து, கஷ்டப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் வாழ்க்கையிலும் இப்படி காரிய தடையால், முன்னேற்றமானது தடை படுகிறதா? வாரஹியை வழிபடுங்கள். வாராஹியை பின் சொல்லக் கூடிய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால், விக்னங்கள் எல்லாம் விலகும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு ஓயாமல் காத்திருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இன்று மந்திரத்தை சொல்லி உறங்குபவர்களுக்கு, நாளை வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையாக, தடங்கலாக இருக்கும் காரியம் என்ன. அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, வாராஹி மனதில் நிறுத்தி, இந்த மந்திரத்தை சொல்லலாம்.

வீட்டு பக்கத்தில் வாராஹி சன்னதி இருக்கிறது என்றால், அந்த கோவிலுக்கு சென்று வாராஹிக்கு விளக்கு போட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். ஏதேனும் அம்மன் கோவில் இருக்கிறது என்றால், அந்த அம்பாளுக்கு விளக்கு போட்டும் வாராகியை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். எந்த இடத்தில் மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. ஆனால் உண்மையான நம்பிக்கையோடு மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

தடைகளை தகர்க்கும் வாராகி மந்திரம்

ஓம் ஐம் க்லௌம், ஸகல விக்ன விநாசின்யை,
ஸ்ரீ வாராஹி நமோ நம ஓம்.

இவ்வளவுதாங்க. எந்த இடத்தில் எல்லாம் தடைகள் வருகிறது, எந்த இடத்தில் எல்லாம் தடுமாறுகிறீர்களோ, தோற்றுப் போய் விடுவோமோ என்ற பயம் வரக்கூடிய இடத்தில் நின்று, இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த அக்ரீமெண்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டால் போதும். என்னுடைய தலையெழுத்தை மாறிவிடும்.

- Advertisement -

நீண்ட நாள் அரசாங்க வேலையில் சில பேருக்கெல்லாம் தடைகள் இருக்கும். சில அப்ரூவல் எல்லாம் கிடைக்காமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட அந்த காரியம் நல்லபடியாக நிறைவேற இந்த மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாராஹியை வணங்கலாம். நீண்ட நாள் சொத்து விற்காமல் இருக்கிறது, நீண்ட நாள் ஒரு பொருளை விற்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றாலும், இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று 8-7-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு

நீண்ட நாட்களாக பெண் பார்க்க போறீங்க, மணமகன் பார்க்க போறீங்க, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் காரியத்தடை இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, உங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும். எந்த காரியத் தடையையும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி, வாராஹிக்கு உண்டு. இந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஆன்மீகம் சார்ந்த மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம்.

- Advertisement -
Published by