
இன்றைய குழந்தைகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும் உணவையே பெருமளவில் விரும்பி உண்கிறார்கள். இது உடலுக்கு நல்லதல்ல என்பது தெரிந்தாலும் கூட, குழந்தைகள் அடம்பிடித்தால் நாமும் அவர்களுக்கு வாங்கி தரத்தான் செய்கிறோம். இதில் பெரும்பாலும் குழந்தைகள் அடிமையாக இருப்பதே இந்த ப்ரைட் ரைஸ் தான். அதுவும் தள்ளுவண்டி கடைகளில் இந்த பிரைட் ரைஸ் நல்ல காரசாரமான முறையில் செய்து தருவார்கள். தினமும் வாங்கி தந்தால் கூட பிள்ளைகள் இதை சாப்பிடத்தான் செய்வார்கள். அப்படி குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த ப்ரைடு ரைஸ் கொஞ்சம் கூட அதன் சுவை மாறாமல் அதே சமயம் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் சேர்க்காமல் ஒரு நல்ல உணவாகவே இந்த தள்ளு வண்டி ப்ரைடு ரைஸ்சை தயார் செய்வது எப்படி என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப், பீன்ஸ் – 1/4 கப்(பொடியாக நறுக்கியது), கேரட்- 1/4 கப் |(பொடியாக நறுக்கியது), ஸ்ப்ரிங் ஆனியன் – 1/4 கப்(பொடியாக நறுக்கியது), மிளகாய் தூள் -1 ஸ்பூன் உப்பு -1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
முதலில் பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு ஒரு 10 நிமிடம் அரிசியை ஊற வைத்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதித்ததும் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து அதில் சேர்த்து விடுங்கள். இந்த பாஸ்மதியில் அரிசி வேக, அரை ஸ்பூன் உப்பையும், ஒரு ஸ்பூன் எண்ணெயும் ஊற்றி அரிசி தொண்ணூறு சதவீதம் வரை வேகம் படி விட்டு அதன் பிறகு வடித்து எடுத்துக் ஆற வைத்து கொள்ளுங்கள். எது ஒரு புறம் இருக்கட்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் இரண்டையும் சேர்த்து கொஞ்சம் உப்புயையும் சேர்த்து மூடி போட்டு மூன்று நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடம் வரை வேக விட்டால் போதும் காய்கள் வெந்துவிடும். காயின் நிறமும் மாறாமல் அப்படியே இருக்கும் எனவே இதற்கு மேல் அதிகமாக வேக விட வேண்டாம். அதன் பிறகு அதில் கால் கப் ஸ்பிரிங் ஆனியனில் பாதியை மட்டும் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து கிளறிய பிறகு வடித்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்து இரண்டு நிமிடம் முடி போட்டு வேக விடுங்கள். பத்து நிமிடம் கழித்து மீதமிருக்கும் ஸ்பிரிங் ஆனியனையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: 3 பொருட்களை வைத்து எப்படி காரசாரமான பூண்டு தக்காளி சட்னி செய்வது? இட்லி, தோசைக்கு தொட்டுக்க இதை விட சூப்பரான காம்பினேஷன் இருக்கவே முடியாது!
சுவையான காரசாரமான தள்ளுவண்டி கடை பிரைட் ரைஸ் ரெடி. இதில் உங்களுக்கு முட்டை சேர்க்க விருப்பமிருந்தால் காய்கள் வெந்த பிறகு மசாலா சேர்ப்பதற்கு முன்பு முட்டையை உடைத்து ஊற்றி அதன் பிறகு மற்றவை சேர்த்துக் கொள்ளலாம்.