
பௌர்ணமி திதி வழிபாடு என்றாலே நம்முடைய நினைவுக்கு வர வேண்டியது அம்மன் வழிபாடு தான். அதிலும் குறிப்பாக கொஞ்சம் உக்கிர தெய்வ வழிபாட்டை பௌர்ணமி நாளில் செய்வது சிறப்பு. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் அம்பாளின் பல் வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும்.
அதாவது வாராஹி, காளி, பிரத்தியங்கிரா தேவி, அங்காளம்மன் இதுபோல இருக்கக்கூடிய தெய்வங்களை பௌர்ணமி நாளில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது ரொம்பவும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை தவறாமல் செய்வது குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும்.
கெட்ட சக்தியை நம் வீட்டில் அண்ட விடாது. நம் உடம்பில் துர் சக்தி தங்காது. வீட்டை தரித்திரம் பிடிக்காது. குடும்பத்தில் சுப காரியத்தடை வராது. இத்தனை நன்மைகளையும் கொடுக்கக்கூடிய வழிபாடு தான் பௌர்ணமி தினத்தில் செய்யக்கூடிய அம்பாள் வழிபாடு.
நாளை (19-8-2024) தினம் ஆவணி மாதத்தின் பவுர்ணமி திதி வரவிருக்கின்றது. இதோடு மட்டுமல்லாமல் ப்ளூ மூன் என்று சொல்லப்படும் அதிசக்தி வாய்ந்த பௌர்ணமி நாள் நாளைய தினம் வரவிருக்கிறது. இந்த நாளில் நம்முடைய உடம்பில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்க குளிக்கும்போது செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
நாளைய தினம் வீட்டில் இருக்கும் அனைவருமே சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது சிறப்பு. முடியாதவர்கள் காலை ஏழு மணிக்குள்ளாவது குளித்து விடுங்கள். நீங்கள் சுடுதண்ணீரில் குளித்தாலும் சரி, அல்லது பச்சை தண்ணீரில் குளித்தாலும் சரி, அந்த தண்ணீரில் 2 சிட்டிகை மஞ்சள் பொடி, 1 கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு, உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் அந்த தண்ணீரில் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி பிறகு அந்த தண்ணீரை கொண்டு குளித்தால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் விலகும்.
இதையும் படிக்கலாமே: நாளை ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு
உங்களுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கும் ஆரா வலுவடைந்து, சுறுசுறுப்பாக செயல்படும். இதநாள் வரை உங்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடக்காமல் இருக்க, உங்களிடம் பணம் நெருங்காமல் இருக்க தடையாக இருந்த அத்தனை கெட்ட சக்தியையும் உங்கள் உடம்பை விட்டு விலக இந்த குளியல் ஒன்றே போதுமானது. நாளைய தினம் அம்பாளின் மீது பாரத்தை போட்டு, இந்த பரிகாரத்தை செய்பவர்கள் அனைவருக்கும் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.