
வீட்டை பிடித்த துன்பங்களும் துயரங்களும் வெளியேற வேண்டும் என்று வேண்டாத நாளில்லை. ஆனால் வீடு எப்போதுமே ஒரு கஷ்டத்தில் மூழ்கி இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் சோகத்தில் தான் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை வீட்டுக்குள் கொண்டு வர என்னதான் செய்வது. 9 நாள் தொடர்ந்து கஷ்டப்பட்டு இந்த விளக்கை வீட்டில் ஏற்றி விட்டால் போதும்.
உங்கள் துன்பங்களுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். மகிழ்ச்சியை வீட்டிற்குள் கொண்டு வரலாம். கஷ்டம் போக்கும் அந்த விளக்கை எப்படி ஏற்றுவது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த விளக்கு ஏற்ற நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் மூன்று எண்ணெய். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், மூன்றையும் சம அளவுகளில் வாங்கி கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். எல்லா எண்ணெயையும் 100ml என்ற கணக்கில் வாங்கி ஒன்றாக கலந்தால் கூட போதும். அப்போது உங்களுக்கு மொத்தமாக 300 ml எண்ணெய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் குளித்துவிட்டு பூஜையறையில் ஒரு மண் அகல் விளக்கில் கலந்து வைத்திருக்கும் எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பிரம்மா விஷ்ணு சிவன் மூன்று பேரையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். விளக்கு எரிந்து குளிரட்டும். மீண்டும் மாலையிலும் அதே மண் அகல் விளக்கில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரையும் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
இதே போல 9 நாட்கள் தொடர்ந்து காலை மாலை 1 மணி நேரம் இந்த விளக்கு உங்க வீட்டில் எரிய வேண்டும். வேறு எதுவுமே தேவையில்லை. சந்தோஷம் உங்களுடைய வீட்டில் குடிகொள்ளும். பொதுவாகவே விளக்கு என்றால் அது கிழக்கு நோக்கி எரிய வேண்டும்.
தெற்கு நோக்கி விளக்கு ஏற்றினால் குடும்பம் தேய்ந்து போகும். வடக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் பொன் பொருள் வந்து கொண்டே இருக்கும். மேற்கு நோக்கி விளக்கு ஏற்றினால் மேலும் மேலும் உயரக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றும் போது குடும்பம் சந்தோஷமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றங்கள் சந்தோஷம் வீட்டிற்குள் வந்தால், மற்ற எல்லாமே தானாக நமக்கு கிடைக்கும். ஒன்பது நாள் இந்த மூன்று எண்ணெயையும் சேர்த்து விளக்கு ஏற்றி அதன் பிறகு உங்களுடைய வீட்டில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை பார்க்கும் போது உங்களுடைய மனதுல் லேசாகும். வீட்டில் இருந்த துன்பங்கள் எல்லாம் மறைந்து விட்டது என்ற நிம்மதியும் பிறக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
அதற்கு பிறகும் இந்த எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா என்று கேட்டால் நிச்சயம் ஏற்றலாம். தவறு கிடையாது. வீட்டிலேயும் இந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம். கோவிலுக்கு சென்றும் மண் அகல் விளக்கில் இந்த எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நிம்மதி இழந்து இருக்கக்கூடிய குடும்பங்கள் எல்லாம் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.