- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பெண்களுக்கு ஏற்படும் துன்பம் விலக பரிகாரம்

பெண்கள் வீட்டின் கண்கள் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு இல்லத்தில் பெண்கள் இல்லையோ அந்த இல்லம் இல்லமாகவே கருதப்படாது என்றும் கூறப்படுகிறது. ஒரு குடும்பம் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு ஆண்களின் வருமானம் முக்கியமோ அதே அளவிற்கு பெண்களின் சாமர்த்தியமும் முக்கியம் என்று கூறப்படுகிறது.

ஊதாரித்தனமான பெண்கள் இருக்கும் குடும்பத்தில் அந்த குடும்பம் முன்னேற்றத்திற்கு வராது என்று பெண்களைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகார வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களை மகாலட்சுமிக்கு சமமாக கருத வேண்டும். எந்த ஒரு வீட்டில் பெண்கள் சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு மிகுந்த பெண்களுக்கு கஷ்டங்களும் துன்பங்களும் துரத்திக் கொண்டு இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கு வழி தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அதை விலக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகார வழிபாட்டை பார்ப்போம்.

இந்த பரிகார வழிபாட்டை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் 12 குண்டு மஞ்சள் கிழங்குகளை வாங்கி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு அம்மி கல்லில் அரைக்க பாருங்கள் அல்லது ஒரு மஞ்சள் உரசும் கல்லை வைத்து அதில் மஞ்சளை இழைத்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு மஞ்சளை அரைக்கும்பொழுது உங்களுடைய கஷ்டங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

- Advertisement -

முடியாத பட்சத்தில் மிக்ஸி ஜாரை உபயோகப்படுத்துங்கள். அரைத்த இந்த மஞ்சள் விழுதை அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கண்டிப்பான முறையில் எல்லா கோவில்களிலும் தலவிருட்சம் என்று இருக்கும். அந்த தல விருச்சத்மானது அரச மரம் ஆகவோ, வேப்பமரமாகவோ இருந்தால் அது மிகவும் சிறப்பு அல்லது அரச மரமும் வேப்ப மரமும் தல விருச்சமாக இருக்கும் ஆலயமாக பார்த்து செல்லுங்கள்.

தலவிருட்சமாக இல்லாவிட்டாலும் அந்த கோவிலில் இந்த மரம் இருந்தாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். அந்த மரத்திற்கு நீங்கள் அரைத்து வந்த இந்த மஞ்சள் கிழங்கு விழுதை பூச வேண்டும். பிறகு அதற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு சௌந்தர்யலஹரி அல்லது அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை பாட வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர பெண்களுக்கு இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும். இதோடு மட்டுமல்லாமல், பெண்கள் தினமும் குளிக்கும் பொழுது சிறிதளவு மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலமும் அவர்களை பின் தொடரும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ மூலிகை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த மஞ்சள் பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்யும் பெண்களுக்கு துன்பங்கள் ஏற்படாது.

- Advertisement -