- Advertisement -

அன்றைய காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் என்பது இருந்து வந்தது. அது நாளடைவில் படிப்படியாக குறைந்து இப்பொழுது முழுவதும் இல்லாமலே சென்று விட்டது. அதையும் மீறி சிலர் வெறும் தலைக்கு மட்டும் எண்ணெயை வைத்து ஊற வைத்து குளித்து விடுகிறார்கள். ஆனால் அன்றைய காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணையை தடவி வெயிலில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு தான் குளிக்க செல்வார்கள். இதனால் நம்முடைய உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்பட்டது. சருமமும் நன்றாக இருந்தது

எப்பொழுது இந்த எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததோ அதிலிருந்து தான் உடலில் பல பிரச்சினைகளும் சருமத்தில் பல பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பித்தது. இப்பொழுது இப்படி உடல் முழுவதும் எண்ணையை தேய்த்துக்கொண்டு அன்றைய காலத்தில் இருந்தது போல் வெயிலில் அமர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் நம்முடைய சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு சில மூலிகை பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்து உபயோகப்படுத்தலாம். அப்படிப்பட்ட எண்ணையை எப்படி தயாரிப்பது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த மூணு பொருள் இருந்த உடல் பளபளப்பாக்கும்

சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான சில மூலிகைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டும். அந்த மூலிகைகளை நம் முறையாக உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். சருமம் என்றதும் பலரும் தங்களுடைய முகத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால் சருமம் என்று நாம் கூறுவது நம்முடைய உடல் முழுவதையும் தான்.

சரும பிரச்சினை என்றதும் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் இவற்றை தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சரும பிரச்சனை என்பது முகத்தில் வரக்கூடிய பிரச்சினை மட்டுமல்லாமல் உடல் முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினைகளை குறிக்கிறது. தேமல், அரிப்பு, படை, வெண்படை என்று பல இருக்கின்றன. இவை அனைத்தையுமே சரி செய்வதற்குரிய ஒரு எண்ணையாக தான் இந்த எண்ணெய் திகழப் போகிறது.

- Advertisement -

இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு நமக்கு மூன்று பொடிகள் வேண்டும். இந்த மூன்று பொடிகளும் நாட்டு மருந்து கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கும். இந்த பொடிகளில் ஒரு ஸ்பூன் சரிசமமாக எடுத்து ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இதற்கு நமக்கு தேவைப்படுவது சுத்தமான செக்கில் ஆற்றிய தேங்காய் எண்ணெய் 150 எம்எல். இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து அந்த பொடியுடன் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெய் ஆறியதும் அதை மூடி போட்டு மூடி வெயிலில் மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு தான் இந்த எண்ணெயை நாம் பயன்படுத்த வேண்டும். அந்த மூன்று பொடிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அந்த பொடிகள் தான் அதிமதுர பொடி, பீட்ரூட் பொடி, மஞ்சிஸ்தா பொடி. தினமும் குளிப்பதற்கு முன்பாக இந்த எண்ணையை சருமத்தில் தடவி காலையில் வெயிலில் ஐந்து நிமிடம் நின்று விட்டு பிறகு எப்பொழுதும் போல் குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முடி வளர்ச்சியை தூண்டும் மோர்

இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி உடல் முழுவதும் தங்கம் போல் மின்ன ஆரம்பிக்கும். இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்து நம்முடைய சருமத்தை பொலிவுடன் அழகாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்வோம்

- Advertisement -