- Advertisement -

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கப் போகிறது. துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்கும் நிலை வரும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தைரியம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சில மாற்றங்கள் உங்களுக்கு நெருடலை உண்டாக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழிலில் உள்ள பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை அத்துபடியாகும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பணி ஆட்கள் நியமிப்பதில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நுணுக்கமான வேலைகளை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் நேர்மறையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்து காணப்படும். சுற்றியுள்ளவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். எதிர்பார்த்த வேண்டுதல்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சாதனைகள் படைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததை அப்படியே நடத்தி காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்த வேண்டுதல்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற நபர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்கள் ஆக மாறக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுகு திடீர் குழப்பம் வரும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அநியாயத்தை கண்டு பொங்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்களில் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தன லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதை தளர விட வேண்டாம்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில சூட்சமங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தங்களுடைய நேர்மறையான எண்ணம் வெற்றியை கொடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் கடமைகளில் கவன சிதறல் ஏற்படலாம், எச்சரிக்கை தேவை.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை மேலும் மெருகேற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுபவம் நிறைந்த நாளாக கடக்க இருக்கிறீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வரவிற்கு மீறிய செலவுகள் வந்து சேரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக திறமை வெளிப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது.

- Advertisement -