- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று மன உறுதியுடன் செயல்பட வேண்டும். சின்ன சின்ன ஏமாற்றங்களை கண்டு துவண்டு போகக்கூடாது. தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுடைய தினசரி வேலையில் எந்த சோம்பேறித்தனமும் இருக்கக்கூடாது. நேரத்தை வீணடிக்காமல் இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இழந்த கௌரவத்தை மீட்டு எடுக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். நிதிநிலைமை சீராகும் கடன் சுமை குறையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களால் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிதானமான அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் செல்லும். மன சஞ்சலங்கள் விலகும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன கசப்பான நாளாக இருக்கும். ஏமாற்றங்கள், சண்டை சச்சரவுகளால் மன நிம்மதி கெட்டுப் போவதற்கு சின்ன வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நம்பிக்கையை தளர விடாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். வந்த துன்பம், வந்த வழி தெரியாமல் காணாமல் போகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன் கோபம் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிதானத்தை கையாள வேண்டும். மூன்றாவது நபரின் பேச்சை முழுமையாக கேட்கக்கூடாது. வேலையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களை பார்க்கும் போதே அடுத்தவர்களுக்கு பொறாமை வரும். அந்த அளவுக்கு வசீகரத் தோற்றமும் பேச்சும் உங்களை உயர்த்தி காட்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எடுத்த வேலையை எடுத்த உடனேயே செய்து முடிக்க முடியாது. சில இழுபறியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். விடாமுயற்சிக்கு பிறகு வெற்றி உங்களை வந்து சேரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். தேவையில்லாத சங்கடங்கள் உங்களை விட்டு விலகி, இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல், திருமணம் வரை செல்லும். ஆடி முடிந்தவுடன் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. கமிஷன் தொழில் நல்ல லாபத்தை தரும். கட்டுமான தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு முயற்சி செய்யுங்கள், நல்லது நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -