
மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள் கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குழப்பத்தில் இருந்த உங்கள் மனநிலை மாறும். சந்தேகங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியை படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய கனவு நினைவாக, இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த நபரோடு சிறிது நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய ஞாபகங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பிரச்சனைகளை சமாளிக்க தைரியம் பிறக்கும். கசப்பான விஷயங்கள் உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று. கடன் சுமை குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். யாரிடமும் சண்டைக்குப் போக வேண்டாம். பஞ்சாயத்தை கூட்ட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கும் பட்சத்தில் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். முன்கோபம் அதிகமாக வரும். சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்துவிட்டு இந்த நாளை துவங்குங்கள். இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலையை மறந்துவிட்டு, தேவையில்லாத வேலையில் உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடமையை தவறாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் கைப்பேசி பார்த்து நேரத்தை வீணடிக்க கூடாது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, குறித்த நேரத்தில் முடிப்பதே நல்லது.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும். நல்லது நடக்கும் நாள் இன்று.
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக உணர்வீர்கள். உங்களுக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக வேலை பளுவை எடுத்து தலை மேல் போட்டுக் கொள்ள வேண்டாம். நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்ள நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மீன ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கூடுமானவரை வீண் விரைய செலவுகளை குறைப்பது நல்லது.