
மேஷ ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காண்பீர்கள். கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, விடுமுறை நாளை கொண்டாட இன்று மாலையே தயாராகி விடுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த குறையும் வராது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களது கை ஓங்கி நிற்கும். இயலாதவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். தேவையில்லாத டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலை பளு அதிகமாகவே இருந்தாலும் சுறுசுறுப்பாக உங்களுடைய கடமைகளை செய்து முடித்து விடுவீர்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்கள் சேமிப்புகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் உங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சில பேருக்கு வெளியூர் பயணங்கள் செய்யக்கூடிய வாய்ப்புகளும் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எந்த இடத்திலும் டென்ஷன் ஆக வேண்டாம்.
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்து போராடி தான் வெற்றி காண முடியும். விடாமுயற்சியை மேற்கொள்ளுங்கள். தைரியமாக பேசுங்கள். எக்காரணத்தை கொண்டும் இன்று கோழையாக இருக்காதீர்கள். இறைவழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது உங்கள் வாழ்க்கையில் வந்து பிரகாசமாக ஒளி வீசப் போகிறது. கனவு நிறைவேற போகும் நாள். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகமும் வரப்போகிறது. இந்த இனிய நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக தான் இருப்பீர்கள். கூடுதல் முயற்சி எடுக்கும்போது நிச்சயம் நல்லது நடக்கும். சோம்பேறித்தனத்தை கூடுமானவரை விட்டுவிட பாருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது நல்லது.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் கஷ்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்காது. சோதனையை கடவுள் கொடுப்பான். ஆனால் கைவிடமாட்டான். இந்த நாள் வாழ்க்கை பாடங்களை அனுபவிதியாக கற்றுக் கொள்வீர்கள்.
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ராஜபோக வாழ்க்கை தான். சுகமான வாழ்க்கையை அனுபவிக்க போகிறீர்கள். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பிரச்சனைகள் வராது. விடுமுறை நாளை எதிர்பார்த்து, இன்றே உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுக்கான பெருமையை சேர்க்கக் கூடிய நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். திறமையாக பேசுவீர்கள். எல்லோர் மனதிலும் சீக்கிரம் இடம் பிடிப்பீர்கள்.
மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். தேவையில்லாமல் கோபப்பட வேண்டாம். ஈகோ பார்த்து வாழ்க்கை துணையோடு சண்டை போடக்கூடாது. விட்டுக் கொடுத்து நடந்தால் கெட்டுப் போக மாட்டீர்கள் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.