
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக தான் இருக்கும். கவலையால் வேலையில் பின்னடைவு வரலாம். கவலையை தூரமாக தள்ளி வையுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். நிதிநிலைமை சீராகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்ப ஒற்றுமை இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உற்சாகமாக உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைப்பதோடு உங்களுடைய திறமை வெளிப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் லாபமாக மாறும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். சின்ன சின்ன நல்ல விஷயங்களை செய்ய தவறுவீர்கள். சின்னதாக மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்ற நேரத்திற்கு நீங்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க கூடாது. தாமதத்தால் இழப்புகள் ஏற்படலாம். கவனம் தேவை.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வீண் விரைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். தேவையில்லாத பொருட்களை இன்று வாங்குவதை தவிர்த்து விடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
துலாம் ராசிக்காரர்கள் இன்று போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். புதிய முயற்சிகள் உடனடியாக வெற்றியை தராது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். முதலீட்டில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயங்களை பேசக்கூடாது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிம்மதியான நாளாக இருக்கும். தேவையில்லாத சங்கடங்கள் விலகும். புது உறவுகள் தேடி வரும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் இருக்கட்டும்.
தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆர்வத்தோடு புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுப காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத டென்ஷன் குறையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனத்தோடு செயல்படுங்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நல்ல நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உறவுகளோடு பேசி மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாள். மனதில் சந்தோஷம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டில் விருந்தளிகளின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும்.