
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை நம்பிக்கை அதிகரிக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வரும் வாய்ப்புகளை கை நழுவ விட வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபம் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் கொஞ்சம் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளோடு எந்த பிரச்சனையையும் செய்ய வேண்டாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான சுகமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மன நிம்மதி கிடைக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். உற்றார் உறவினர்களோடு நிம்மதியாக இந்த நாளை கடந்து செய்வீர்கள்.
கடக ராசி காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் மனதில் சிந்தித்த விஷயங்களை எல்லாம், இன்று செயல்படுத்தி காட்டுவீர்கள். உங்களுடைய கனவு நிறைவேறும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய நல்ல மனது எல்லோருக்கும் புரியும். கவலைகள் நீங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். குறிப்பாக குடும்ப உறவுகளோடு எந்த சண்டைக்கும் போகாதீங்க. சண்டை வந்தால் கூட, நீங்கள் அமைதி காப்பது நல்லது. இல்லையென்றால் மனஸ்தாபத்தால் பிரிவு உண்டாக வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இன்றைக்கான வேலையை, குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். நீண்ட நாள் கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். உங்களுடைய கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்து விலகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க துவங்கும்.
மகர ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். யாரிடமும் சண்டைக்கு போகக்கூடாது. முன் கோபப்படக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. எதிரிகளாகவே இருந்தால் கூட அவர்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் விதையை கையாள வேண்டும். அப்போதுதான் இந்த நாள் இனிய நாளாக அமையும். இல்லை என்றால் தேவையில்லாத புகையால் நிம்மதி கெட்டுப் போகும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் இரட்டிப்பாகும் நாள். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை, மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பெருசாக பாதிப்புகள் வராது.