
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். தீராத உடல் உபாதைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். முருகர் வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். குழப்பத்தில் இருந்து மனது தெளிவு பெறும். சுப செலவுகள் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. விநாயகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலையில் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது.
கடக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். மனதில் இருந்த பாரம் குறையும். மனது லேசாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சந்தோஷத்திற்கு குறை இருக்காது.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். சிவன் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பரிசு உங்கள் கையை வந்து சேரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். வீன் விரைய செலவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும்.
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடக்கத்தோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் செல்லும். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளிநபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த நாள் முழுவதும் உழைப்பு மட்டும்தான் உங்களுடைய முழு மூச்சாக இருக்கும். நல்ல பெயர் வாங்குவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியமும் உங்கள் கையை வந்து சேரும். பாராட்டும் கிடைக்கும். எதிரி பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த வேலையையும் கையில் எடுக்கக் கூடாது. எதிரி தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனம் சலனத்தோடு இருக்கும். சஞ்சலங்கள் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் வேண்டாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். குழப்பங்கள் சரியாகும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். கொஞ்சம் நிறைய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். குழப்பங்களில் தெளிவு பிறக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. முன்கோபத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.