
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், நல்ல ஓய்வு, சந்தோஷமான பொழுதுபோக்கு என்று இந்த நாள் ஒரு அழகான அனுபவத்தை கொடுக்கும். இந்த விடுமுறை நாள், உங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காத அளவுக்கு நல்ல நினைவுகள் இருக்கும். பல நாள் மனபாரம் குறையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய பகை எல்லாம் நீங்கும். மனதில் இருந்த பாரம் குறையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டிற்கு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் இனிதே நிறைவடையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடக ராசி காரர்களை பொருத்தவரை இன்று லாபமான நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றுவீர்கள். இந்த நாள் நல்ல இனிமையான அனுபவங்கள் கிடைக்கும் நாள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன கசப்பான விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது, சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. நிதானமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பயணங்கள் இனிதே நிறைவடையும்.
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நல்ல நேரம் கைக்கூடி வரும். உறவுகளோடு சேர்ந்து இருந்து நேரத்தை செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். வீட்டில் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டிற்கு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடியும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் பம்பரம் போல உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். விநாயகர் வழிபாட்டிற்கு சுறுசுறுப்பாக தயாராகி விடுவீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நீண்ட தூர பயணங்கள் இனிதே நிறைவடையும். பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் மன உறுதியோடு செயல்படுவீர்கள். தைரியத்தை விட மாட்டீர்கள். புது முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். திறமை வெளிப்படும். சாதனை படைக்கக்கூடிய நாளாக இந்த நாள் அமையும்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் நல்லது நடக்கும்.