- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக் கூடிய நாளாக இருக்கும். பெருசாக எந்த அலைச்சலும் இருக்காது. அலுவலகத்திலும் சரி, வியாபாரம் செய்யும் இடத்திலும் சரி, நீங்கள் ராஜாவாக இருப்பீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப பிரச்சனைகளை மூன்றாவது மனிதரிடம் சொல்ல வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. வியாபாரத்தில் போட்டிகள் பொறாமைகள் இருக்கும். சின்ன சின்ன சிக்கல்களை சிக்கிக் கொள்வீர்கள். ஆனால் தக்க சமயத்தில் நண்பர்களும் உறவுகளும் உங்களை காப்பாற்றி விடுவார்கள். கெட்ட நேரம் இருந்தாலும் அதில் நன்மை நடக்கக்கூடிய நாள் என்பதால், இன்று நிறைய அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் மரியாதை மேலோங்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரமோஷனுக்கு நிறைவே வாய்ப்புகள் உள்ளது. அதற்காக தலைகனத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய இடத்தில் பணிவாக இருங்கள். வியாபாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும் எப்போதும் போல லாபம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் வரும். தொழிலில் நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு மோசம் செய்ய வாய்ப்பு உள்ளது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையும் கொஞ்சம் சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. நீங்கள் காலதாமதமாக செய்யக்கூடிய வேலையின் மூலம் பிரச்சினைகள் வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். எல்லா விஷயத்தையும் அடைந்தே ஆக வேண்டும் என்று போராடுவீர்கள். கடவுள் நமக்கானதை மட்டும்தான் கொடுப்பான். ஆகவே பேராசை படாதீர்கள். அடுத்தவர்கள் பொருள் மீது ஆசைப்படாதீர்கள். தகுதிக்கு மீறி ஆசைப்படாதீர்கள். அடம் பிடித்து எதையும் சாதிக்க வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்காக அன்றாட வேலையை செய்யாமல் விடக்கூடாது. அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முதலீடு செய்வதில் கவனம் இருக்கட்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியப்போக்கு இருக்கக் கூடாது. யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் எல்லாம் தலை நிமிர்ந்து வாழும் அளவுக்கு வெற்றிகள் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தக்கூடிய நாள். உங்கள் மனது எதற்கும் துணிந்து இருக்கும். என்ன ஆனாலும் ஒரு கை இறங்கி பார்த்து விடலாம் என்று துணிச்சலோடு செயல்படுவதால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். துணிச்சலாக இருக்கிறவங்க எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாகவும் இருந்துகனும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் உடல் உபாதைகளை கொடுக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுப காரிய தடைகள் நீங்கும். வருமானம் அதிகமாகும். சேமிப்பு உயரும். கல்வியில் மாணவர்களுக்கு இருந்து வந்த தடை விலகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இடமாற்றம் நன்மையை கொடுக்கும். புதுசாக ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் வாங்குங்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கடையை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை வெகுளித்தனமாக நம்பாதீங்க. குடும்ப விஷயங்களை வெகுளித்தனமாக அளித்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை நாடும். தேவையற்ற குழப்பங்கள் மனதில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக கைபேசி பார்க்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் நேரத்தை செலவு செய்யாதீர்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைப்பது நல்லது.

- Advertisement -