- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். விடுமுறை நாள் என்பதால் இன்று வீட்டிலேயே நிம்மதியாக ஓய்வெடுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கூட வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சவுகரியமான நாளாக இருக்கப் போகின்றது. நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். சந்தோஷமாக இந்த நாளை கடந்த செல்வீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். மனைவி குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை பரிசாக வாங்கிக் கொடுப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு அகலும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடம்புக்கு சூடு கொடுக்கக்கூடிய பொருட்களை சாப்பிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான மனநிலை இருக்கும். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆனால் வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். முடியும் என்று நினைத்தால், நிச்சயமாக சாதிக்க முடியும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு துணிந்து நின்றால் வெற்றி உங்களுக்கே.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் உற்சாகத்தோடு ஆர்வம் காட்டுவீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கு சார்ஜ் ஏறிவிடும். அந்த அளவுக்கு உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உங்க கூட இருப்பவர்களையும் வாழ்க்கையில் உயர்த்தி விடுவதற்கு உதவிகளை செய்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். பீரோ நிறைய பணத்தை அடுக்கி வைக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். புதுசாக பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப காரிய செலவு உண்டு. வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வசூல் ஆகும். சொத்து சேர்க்கை உண்டு. தொழிலில் அனுபவ சாலிகளை கேட்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முன்பின் தெரியாத தொழிலில் காலை வைக்க வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால் அந்த வேலையை தொடங்கிய பின்பு யோசிக்காமல் செயல்பட வேண்டும். அப்போதுதான் வெற்றி காண முடியும். எப்போதும் சிந்தனையிலேயே மிதக்காதீர்கள். ஆக வேண்டிய வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அசதியான நாளாக இருக்கும். காலை தொடங்கி மாலை முதல் ஏதாவது ஒரு வேலை உங்களை பின்தொடரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சரி, வீட்டில் ஓய்வு எடுக்கும் ஆண்களுக்கும் சரி, இன்று வேலை ஓயாது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை நிலவும். பார்த்துக்கோங்க. நிறைய தண்ணீர் குடிக்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். சேமிப்பு கரையும். தேவையில்லாத நண்பர்களையும் உறவுகளையும் கூட்டு சேர்த்துக் கொள்ளாதீர்கள். உதவி என்ற செய்யப் போனீர்கள் என்றால், உங்களுக்கு உபத்திரவமாக முடிந்துவிடும். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். கொஞ்சம் குள்ளநரி வேலை பாருங்கள். கொஞ்சம் பொய் சொல்லுங்கள். தவறு கிடையாது. நம்மை காப்பாற்றிக் கொள்ள நாம் தான் திறமையாக சிந்திக்கணும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்ற சிக்கலான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் தீர்ப்பதற்கு உண்டான வழி தெரியாமல் தவிப்பீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். தாய்மாமன் உறவோடு ஜாக்கிரதையாக இருக்கவும். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு பிரச்சனை செய்வார்கள். இப்படி பல வகையில் சிக்கிக் கொண்டு திணறுவீர்கள். எதுவாக இருந்தாலும் நேராக நின்று, நேர்மையாக பதில் சொல்லுங்கள். ஒளிந்து மறைய வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். நிறைய வேலை செய்வீங்க. அதே சமயம் நிறைய சந்தோஷமும் இருக்கும். வீட்டில் மனைவியின் அனுசரணையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வருமானத்தை சேமிப்பில் வையுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -