
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடை விலகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நல்லது நடக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மனதிற்கு திருப்தியை தரும். பணத்தடை நீங்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். புதிய முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சுறுசுறுப்பு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளுடைய நம்பிக்கைக்கு, ஏமாற்றம் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் மன நிம்மதியை தரும்.
சிம்ம ராசிக்காரர்கள் இன்று முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். முன்கோபம் உங்களுடைய முன்னேற்றத்தை தடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இன்று நிதானமாக இருப்பது அவசியம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாராக இருக்க வேண்டும். மூன்றாவது நபரிடம் ஏமாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணிவு வேண்டும். அடக்கம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. ஆர்பாட்டம் இருக்கக் கூடாது. தற்பெருமை பேசக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. இளைஞர்கள் நிதானதோடு சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றாதீங்க. அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான ஆரோக்கியமான நாளாக இருக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு சரியாகும். புது நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்கால முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை தரும்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசலனம் இருக்கும். சந்தேகங்கள் எழும். குழப்பமான சூழ்நிலை உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் தெளிவாக இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். எது நல்லது , எது கெட்டது என்ற தீர்மானத்திற்கு வருவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துவீர்கள். எல்லாமே நல்லபடியாக நடந்து முடியும். ஆனால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஈகோவை குடும்பத்தில் காட்டக் கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானம் தேவை.