- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடித்துவிடுங்கள். யாருக்கும் யாருக்காகவும் அவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக இருக்கும். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி உண்டு. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சந்தோஷம் மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். பக்குவத்துடன் பேசுவீர்கள். பக்குவத்துடன் நடந்து கொள்வீர்கள். பல பேருடைய பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை சொல்லுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப உறவுகளோடு ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கும். நேரத்திற்கு உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று உற்சாகம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். அலுவலக வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும் பெருசாக பிரச்சனைகள் வராது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் முதல், பெரிய பெரிய பிரச்சனைகள் வரை, எல்லா விஷயத்தையும் திறமையாக கையாளுவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையில் புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். வங்கி கடன் கிடைக்கும். இரவு நல்ல தூக்கமும் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத மன கசப்பான விஷயங்கள் உங்களை விட்டு விலகும். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வை கண்டு பிடிப்பீர்கள். வேலை வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல விஷயங்கள் கை கோடி வரும். வீட்டில் தடைப்பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் மனதில் இருந்து விலகும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். பிள்ளைகளால் மனநிறைவு ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் உங்களுடைய பேச்சுக்கு நல்லதொரு மரியாதை கிடைக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். சக ஊழியர்களுடன் வேலை செய்யும் போது முன்கோபம் வேண்டாம். வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

- Advertisement -