- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்

மேஷம்:

வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அசுவினி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். மாலையில் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாங்கக் காரியங்களை முற்பகலுக்குள் முடித்துக்கொள்வது நல்லது.

கன்னி:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

- Advertisement -

துலாம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு:

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

மகரம்:

உற்சாகமான நாள். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.
- Advertisement -

கும்பம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

இன்று பிரச்சனைகள் தீரும். எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். செயல்களில் நிதானத்தை பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -