- Advertisement -

மேஷம்:


இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -


இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

மிதுனம்:


எதிர்பாராத தனலாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கடகம்:

- Advertisement -


இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:


பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கன்னி:

- Advertisement -


வீண் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது.

துலாம்:


புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தனுசு:


இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

மகரம்:


இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:


உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மீனம்:


இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -