- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அரசல் புருசலாக உங்க காதில் விழும். அது உங்களுக்கு மனதளவில் சந்தோஷத்தை கொடுக்கும். விடாமுயற்சியை மூலதனமாக போடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது ஆதாயம் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களால் சில சிக்கல்கள் வரலாம். இதனால் உங்களுடைய நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உறவுகளுக்குள் ஒற்றுமை இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய முன்னேற்றம் அடுத்தவர்கள் பெருமை பேசும் அளவுக்கு இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் கூட கூடிய நாளாக இருக்கும். இதனால் உங்களுடைய இந்த நாள் அமைதியான நாளாக செல்லும். கஷ்டங்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி நிலையான வருமானத்திற்கு உண்டான வழிகளை அடைவீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது நல்லது நடக்கும். சில பேருக்கு இட மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சுமுகமான போக்கே நிலவும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். தொழிலில் புதிய முதலீட்டை செய்யாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை சரியாக பார்க்க வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலைகளை தொடங்கி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பணவரவு, நகை வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆர்வத்தோடு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதனால் வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளுடைய படிப்பு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனநிறைவு கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். வியாபாரம் வேலை இவைகளில் சுமூகமான போக்கே நிலவும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் கூடுதலாக இருக்கும். இன்றைய வேலையை கொஞ்சம் முன்கூட்டியே தொடங்கி விடுங்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். எந்த வேலையையும், இந்த நேரத்தில் முடித்து தருவதாக வாக்கு கொடுக்காதீங்க. அப்படி கமிட்மென்ட் செய்ய வேண்டிய வேலையாக இருந்தால், கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்து கமிட் பண்ணிக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்காது. இதனால் காரிய தடை உண்டாகும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகமாக வெயிலடிக்கும் சமயத்தில் வெளியிடங்களுக்கு செல்லாதீங்க. வீட்டில் இருக்கும் வயதானவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகளை சமாளிப்பதில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். எதிர்பாராத விரைய செலவு சேமிப்பை கரைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸான நாளாக இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டவும். மனைவியை அனுசரித்து நடந்தால் பிரச்சனை இல்லை.

- Advertisement -