- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நிம்மதியான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு இருக்கும். பெரிசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களால் முடிந்தால் வாழ்க்கை துணைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். கணவன் மனைவிக்குள் கூடுதல் அன்பு பெற இந்த உதவி நிச்சயம் வழிவகுக்கும். பிள்ளைகளுடைய படிப்பில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். நேரம் கிடைக்கும்போது அவர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் சுமூகமான போக்கு நிலவும். பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது. மேலதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பிரச்சனை கிடையாது. ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை செய் என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு செய்யுங்கள். வாக்குவாதம் பண்ணாதீங்க.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுக்களை தொடங்கலாம். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனம் மகிழ்ச்சி அடையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அதை சரி செய்யும் அளவுக்கு உங்களுக்கு திறமை இருக்கிறது. பார்த்துக்கோங்க, தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரத்தான் செய்யும். அதேபோல தொழிலிலும் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும் சமாளிப்பது உங்கள் கடமை.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக இருப்பீர்கள்‌. எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்படுவீர்கள். இதனால் உங்களுடைய வாழ்வு என்றும் வளம் பெறும். நிதி நிலைமை சீராக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சனைகள் அலுவலகத்தில் இருக்காது. தொழிலில் பாட்னர் உடன் கவனத்தோடு நடந்து கொள்ளவும். கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதில் கவனம் காட்டுங்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று முக்கியமான வேலைகளை தொடங்குவதாக இருந்தால் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனைவியின் மீது கோபத்தை காட்டாதீங்க. வீட்டில் கொஞ்சம் நேரத்தை செலவழிப்பது நல்லது. எப்போதுமே வேலை வேலை என்று இல்லாமல் பிள்ளைகளுக்கு கொஞ்சம் நேரத்தை ஒதுக்கணும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். எதிரிகளைக்கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். ஆனால் மனைவியை சமாளி பதில் சின்ன சிக்கல் வரும். எப்போதோ சொன்ன பொய்க்கு இன்று தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைமை வரலாம். என்ன நடந்தாலும் வாழ்க்கை துணையிடம் உண்மையை சொல்லி விடுங்கள். அதுதான் இல்லற வாழ்க்கைக்கு நன்மை வகுக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனம் ஈடுபடும். பழமையான கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடிங்க. ஆரோக்கியத்தையும் ஒரு பக்கம் பார்க்கணும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் சிக்கல்கள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. காரணம் உங்களுடைய அணுகுமுறை இன்று சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கவலையான மனநிலமை இருக்கும். கொஞ்சம் சோர்வாகத்தான் இருப்பீர்கள். விடுமுறை நாள் இருந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. வீட்டில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முடிந்தால் இன்று பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்யுங்கள். உங்களுடைய மனது தெளிவு பெறும். தீரா கஷ்டம் தீரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியாக செல்லும். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சில பேர் காதலை வெளிப்படுத்துவீர்கள். சில பேருடைய காதல் வெற்றியை அடையும், சில பேருடைய காதல் மோதலில் முடியும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். புதுசாக தொழில் விஷயத்தில், வேலை விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றால் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஒரு முறை கேளுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவோ எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொண்டு, நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் சின்ன ஏமாற்றத்தில் முடியலாம். அதற்காக துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி நிச்சயம் விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். முக்கியமான வேலைகளை முக்கூடுமானவரை நாளை தள்ளிப் போடுங்கள். இன்றைக்கான வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைக்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு என்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைக்கு ஆதரவாக மனைவி இருப்பாங்க. நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். உடல் பருமனோடு இருப்பவர்கள் எடையை குறைப்பதற்கு உண்டான வழியை கொஞ்சம் பார்க்கணும். வாகனங்களை செல்லும்போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வாங்க.

- Advertisement -