- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்களைக் கொடுக்கப் போகிறது. விரயங்கள் ஏற்பட்டாலும் சுப விரயமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இறை வழிபாடுகளில் அதிகம் ஆர்வம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் பதவி உயர்வு பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு திருப்தியாக இருப்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நிலையில் மந்த நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அக்கறையும் அனுசரணையான பேச்சும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கிரக அமைப்பு சிறப்பாக இருப்பதால் பயணங்கள் தொடர்பான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த இடையூறுகள் நீங்கி விடும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கூடும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சுபச் செய்திகள் தேடி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை தெளிவுறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் வெற்றியாக கூடிய அற்புதமான நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட நாளாக நினைத்து வைத்திருக்கும் காரியங்கள் ஜெயமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய சாதுர்யமான திறமையால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். தேவையற்ற வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. குடும்பத்தில் இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான விஷயத்தில் புதிய முதலீடுகள் அனுகூல பலன் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயணங்களால் அனுகூலம் உண்டு என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய அறிவுக் கூர்மையால் மற்றவரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிவிடுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய நிகழ்வுகள் நடை பெறலாம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடல் உபாதைகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாட்டில் எச்சரிக்கையாக இருந்தால் மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த பணம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக பிரச்சனையின்றி நடைபெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடை ஏற்பட்டு இருந்த நிகழ்வுகளில் தடைகள் விலகும் யோகம் உண்டு. சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். சுபகாரிய முயற்சிகளும் வெற்றி தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மூத்த நபர்களை அனுசரித்துச் செல்வதால் பல பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பொருளாதார ரீதியான சிக்கல்களை திறமையாக கையாளுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகள் எளிதாக பூர்த்தியாகும். தொழிலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த எதிரிகளின் தொல்லை நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கிய ரீதியான விஷயத் தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்கள் ஆதரவோடு இருப்பார்கள். நீங்க சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் இழுபறி நிலவும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -
- Advertisement -