- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பணவரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பைரவரை துதியுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகையால் மனம் மகிழும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தள்ளிப்போடுவது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் தடைகள் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய கூட்டாளிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு மனோதிடம் கூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பணவரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

- Advertisement -

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அமைப்பு உண்டு. முருகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் அன்னோன்யம் கூடும். இறைவழிபாடு மேற்கொண்டால் மன அமைதி பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. முன்பின் தெரியாத நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். ஒற்றுமை வலுவாகும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையப் பெறும். பெண்கள் உணவு கட்டுப்பாட்டில் கவனம் கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத மன சங்கடத்தை உருவாக்கி கொள்ள நேரிடும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பண ரீதியான விஷயங்கள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருக்கும் கடன் தொகைகள் வசூலாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நினைவாற்றல் குறையும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அளவிடக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப்பெறும்.

- Advertisement -