- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகத்தை தங்கம் போல மின்ன வைக்கும் தக்காளி

இயற்கையிலேயே நம்முடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் இயற்கையான பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் தான் நம்முடைய அழகு நிரந்தரமாக இருக்கும். அப்படிப்பட்ட இயற்கையான பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் தக்காளி.

தக்காளி இல்லாத வீடு இருக்காது. இந்த தக்காளியில் பல சத்துக்கள் இருக்கிறது. இந்த தக்காளியை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகம் தங்கம் போல மின்ன ஆரம்பிக்கும். எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த அழகு குறிப்பில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தக்காளியில் அதிக அளவு பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, மெக்னீசியம், ஆன்டி ஆக்ஸைடு போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது சருமத்திற்கு நன்மையை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. தக்காளியை வைத்து பல வழிகளில் நம்முடைய முகத்தை நம்மால் அழகு செய்து கொள்ள முடியும். முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஏற்றவாறு தக்காளியை நாம் பயன்படுத்தலாம்.

கண்களுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளையத்தை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தக்காளியை கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி காலையிலும், இரவிலும் இரண்டு வேளைகள் தினமும் செய்து வர படிப்படியாக கருவளையம் நீங்குவதை பார்க்க முடியும்.

- Advertisement -

சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்பட்ட கருமை நீங்குவதற்கு தக்காளி சாறு 2 ஸ்பூன், வெள்ளரி சாறு ஒரு ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் இவை மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். வெள்ளரி சாறு கிடைக்காதவர்கள் அதற்கு பதிலாக கெட்டி தயிரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

முகத்தின் சுரக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையான அளவு கடலை மாவை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து மீதம் இருப்பதற்கு தக்காளி சாறை சேர்த்து நன்றாக விழுதாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரினால் கழுவ முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை என்பது நீங்கும்.

- Advertisement -

பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் தக்காளியை தங்களுடைய முகத்தில் தடவி வரலாம் அல்லது தக்காளி சாறுடன், கஸ்தூரி மஞ்சள் தூள், சந்தன பொடி சேர்த்து முகத்தில் பேஸ் பேக்காக பயன்படுத்தினாலும் பொலிவான முகத்தை பெற முடியும். தக்காளியில் சர்க்கரை சேர்த்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய இது ஒரு ஸ்க்ரப்பராக பயன்பட்டு இறந்த செல்களை நீக்க உதவும்.

இதையும் படிக்கலாமே: கடுக்காய் ஹேர் பேக்

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த தக்காளியை இந்த முறையில் நம்முடைய தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி நம்முடைய அழகை மேலும் அழகாக்கி கொள்வோம்.

- Advertisement -