- Advertisement -

பொலிவான சருமத்தை பெற உதவும் தக்காளி.

முகம் எந்த அளவிற்கு பொலிவாகவும் அழகாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு நாமும் அழகாகவும் பொலிவுடன் திகழ்வோம். மேலும் இளமையான தோற்றத்தையும் நம்மால் பெற முடியும். அப்படி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கருமைகள் போன்றவை அனைத்தும் நீங்க வேண்டும். இவை அனைத்தும் நீங்குவதற்கு சமையலறையில் இருக்கக்கூடிய தக்காளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் தக்காளி, தக்காளி இல்லாத சமையலே இருக்காது என்று தான் கூற வேண்டும். தக்காளியில் ஆன்ட்டி ஆக்சைடு அதிக அளவில் இருக்கிறது. அதனால் தக்காளி நம்முடைய முகத்திற்கு நல்ல பலன்களை தரக்கூடியது. தக்காளியை ஃபேஸ் பேக்காக நாம் பயன்படுத்துவதோடு அதை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் முழுவதும் பொலிவைப் பெறும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது.

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளும், கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம், கழுத்தில் இருக்கக்கூடிய கருமையும் நீங்குவதற்கு தக்காளி மிகவும் உதவி செய்யும். தக்காளி சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒரு மாதத்தில் இருந்து 48 நாட்கள் வரை தினமும் செய்து வர முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், பருக்கள், கருவளையம், கருமை போன்ற அனைத்தும் நீங்கி முகம் பொலிவுடன் திகழும். இதோடு மட்டுமல்லாமல் தக்காளி சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ரவையை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு முகம் வெண்மையாகவும் பொலிவாகவும் திகழும்.

இதை வாரத்திற்கு மூன்று முறையாவது செய்வதன் மூலம் இயற்கையான பொழிவையும் அழகையும் நம்மால் பெற முடியும். தக்காளியிலும் உருளைக்கிழங்கிலும் முகத்திற்கு நன்மைகள் தரக்கூடிய பல சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் எதையுமே பயன்படுத்தாமல் இயற்கையிலேயே நம்மால் அழகாக இருக்க முடியும். மேலும் இது வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையான தோற்றத்தையும் தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே பளிச்சென்ற வெண்மையான முகத்தை பெற ஃபேஸ் பேக்

மிகவும் எளிதில் அனைவரின் சமையலறையிலும் இருக்கக்கூடிய இந்த தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை முகத்திற்கு பயன்படுத்தி அழகான இளமையான பொலிவான முகத்தை பெற்றுக் கொள்வோம்.

- Advertisement -