- Advertisement -
சமையல் குறிப்புகள்

மதியம் லஞ்சுக்கு 1 கப் தயிர் சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்களேன். உடல் எடை சீக்கிரமே குறைந்து நீங்களும் சிக்கென அழகாக மாறிவிடுவீர்கள்.

- Advertisement -

தயிர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா. அது எப்படி என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். சிறுதானியத்தில் தயிர் சாதம் சாப்பிட்டு வர நிச்சயமாக உங்களுடைய உடல் எடை குறையும். சிறுதானியத்தை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும், அப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரிசிக்கு பதில் இந்த சிறு தானியத்தை நம்முடைய உணவோடு சேர்த்து வர நிச்சயமாக உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து சீக்கிரமே உடல் எடை படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். வரகு அரிசியில் சுவையான தயிர் சாதம் சுலபமாக எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் 1 கப் அளவு வரகு அரிசியை எடுத்து சுத்தமாக மூன்றிலிருந்து நான்கு முறை கழுவி விடுங்கள். அதன் பின்பு அந்த அரிசியில் நல்ல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் இந்த அரிசியை ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரை எடுத்து அதில் 1 கப் அளவு ஊற வைத்த அரிசியை போட்டு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சில பேருக்கு வரகு அரிசியை வேக வைக்கும் போது பிசுபிசுவென கொழகொழவென வரும். பொலபொலவென வராது. வரகரிசியை வேக வைக்கும்போது தண்ணீரில் 1/4 ஸ்பூன் அளவு நெய் சேர்த்து வேக வைத்து பாருங்கள். சூப்பராக வெந்து வரும்.

சரி, மூன்று விசில் வரட்டும். வந்தபிறகு பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து வெந்த வரகு அரிசியை தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆறட்டும். அதன் பின்பு சரியான அளவு புளித்த தயிரை தேவையான அளவு, இந்த வரகு அரிசியில் ஊற்றி நன்றாக பிசைந்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதோடு தேவையான அளவை உப்பை மறக்காமல் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு சூப்பரான ஒரு தாளிப்பு கொடுக்கவேண்டும். அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வரமிளகாய் – 2, பச்சை மிளகாய்  பொடியாக நறுக்கியது – 1, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இஞ்சி பொடியாக நறுக்கியது – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மணக்க மணக்க தாளித்து இதை அப்படியே கலந்து வைத்திருக்கும் வரகு தயிர் சாதத்தில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.

இதன் மேலே பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை தூவி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கலந்து விட்டு அப்படியே சாப்பிட்டு பாருங்கள். அத்தனை சுவையாக இருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெயில் காலத்தில் ஏற்ற ஒரு சிறு தானிய உணவு இது. இந்த தயிர் சாதத்தை வரகு அரிசியில் தான் செய்ய வேண்டுமா? என்று கேட்டால் நிச்சயம் கிடைக்காது. கிடையாது சாமை, குதிரைவாலி போன்ற மற்ற சிறுதானியத்திலும் இந்த தயிர் சாதத்தை செய்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தயிர் சாதத்தை செய்து வைத்துவிட்டு இதன் மேலே மாதுளை பழ முத்துக்களை தூவியும் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவைப்பட்டால் இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு காய் பொரியல் செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால் சிக்கன் மட்டன் கிரேவி எதை வேண்டுமென்றாலும் தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -