- Advertisement -

கேட்ட வரம் கிடைக்க முருகர் மந்திரம்

- Advertisement -

நாம் கேட்ட வரத்தை மட்டும் தரக்கூடிய வல்லமை கொண்டவர் அல்ல முருகர். நீங்கள் கேட்காத வரத்தையும் கூட வாரி வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்ட முருக பெருமான் மனதை குளிர வைக்க வேண்டும் என்றால், அவர் முன்பாக நின்று நீங்கள் பாடல்களை பாட வேண்டும். முருகருக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்.

முருகனைப் புகழ்ந்து நீங்கள் பாடினீர்கள் என்றால் அவர் மனம் குளிர்ந்து மெய் மறந்து நீங்கள் கேட்ட வரத்தை கொடுத்து விடுவார். மனிதர்களுடைய மனது பாடலைக் கேட்டு எப்படி மயங்குகிறதோ, அதேபோலத்தான் அந்த முருகப்பெருமானின் மனதும் பாடலை கேட்கும் போது நிச்சயம் மயங்கும். முருகன் கோவிலுக்கு சென்றாலும் சரி, முருகன் வழிபாட்டை வீட்டிலேயே சென்றாலும் சரி, முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு பதிகத்தை படியுங்கள்.

- Advertisement -

அந்த வகையில் இன்று திருப்புகழிலிருந்து எடுக்கப்பட்ட முருகனுக்கு ரொம்பவும் பிடித்த ஒரு பதிகத்தை பற்றிய பாடல் வரிகளை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

திருப்புகழ் பதிகம்

சுட்ட திருநீறெடுத்துத் தொட்டக் கையில் வேலெடுத்துத்
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் சுந்தரம் சுந்தரம்!

- Advertisement -

அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்.

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே நெஞ்சமே நெஞ்சமே!

- Advertisement -

அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.

மந்திரம் இவ்வளவுதான். இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி முருகனை வழிபாடு செய்தால் முருகன் மனம் குளிர்ந்து நீங்கள் கேட்டதற்கு மேல் வரங்களை வாரி வாரி கொடுப்பார். அந்த அளவுக்கு திருப்புகழில் அரவணகிரிநாதர் நமக்கு இந்த பாடலை வகுத்து கொடுத்துள்ளார். முருகனுக்கு ரொம்பவும் பிடித்த பாடல் வரிகளில் இதுவும் ஒன்று.

செவ்வாய்க்கிழமை அன்று இந்த பாடலை முருகனின் திருவுருவப்படத்தின் முன்பாக அமர்ந்து படிக்கலாம். கோவிலுக்கு செல்லும்போது இந்த பாடலை படிக்கலாம். சஷ்டி கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த திதிகள் வரக்கூடிய நாட்களில் இந்த மந்திரத்தை சொல்லுவது சிறப்பான பலனை கொடுக்கும். நீங்கள் முருக பக்தர்களா.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க நாளை குளிக்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தை

தினமும் காலையில் எழுந்து நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு இந்த பாடலை படியுங்கள். முருகன் உங்களோடு துணையாக வந்து நிற்பார். முருக பக்தர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன்.

- Advertisement -
Published by