
நிறைய பேருக்கு மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். எல்லோரும் அழகாக இருக்கிறார்கள். வெள்ளையாக இருக்கிறார்கள். நான் மட்டும் அழகாக இல்லை. வெள்ளையாக இல்லை. போதாத குறைக்கு சருமத்தில் கரும்புள்ளிகள், மங்கு, கருத்திட்டுகள், முகப்பரு, என்று பலவிதமான பிரச்சனைகள். இதையெல்லாம் சரி செய்ய என்னதான் செய்வது. நானும் மற்றவர்கள் போல் அழகாக மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எளிமையான வீட்டிலிருந்தபடியே ஒரு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த அழகு குறிப்புக்கு பெரிய அளவில் பணம் செலவு செய்ய வேண்டும் என்று அவசியம் கூட இல்லை. ஆனால், ஓரிரு நாட்களில் இன்ஸ்டன்டாக உங்கள் சருமத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.
சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க பச்சைப்பயிறு ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக் தயார் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை பயிறு மாவு – 2 ஸ்பூன், இன்ஸ்டன்ட் காப்பி தூள் – 1 ஸ்பூன், எலுமிச்சம்பழம் சாறு – 1 ஸ்பூன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இதை பேக் போல தயார் செய்து கொள்ள வேண்டும். (நல்லதாக இருக்கும் எந்த பிராண்ட் காப்பி தூள் வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.)
இந்த பேக்கை இரண்டு வழிகளில் நாம் பயன்படுத்த போகின்றோம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. ஸ்க்ரப் செய்ய ஒரு தக்காளி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய தக்காளி பழத்தின் உள்பக்கம், நாம் தயார் செய்த ஃபேஸ் பேக்கை முக்கி, அப்படியே உங்கள் முகத்தில் வைத்து வட்ட வடிவில் ஸ்கிரப் செய்ய வேண்டும். தக்காளி பழத்தில் இருக்கும் சாறு, தயார் செய்து வைத்திருக்கும் பேக் இரண்டும் சேர்ந்த படி, முகத்தை ஜென்டில் ஆக ஸ்கிரப் செய்து கொடுக்க வேண்டும். இரண்டு நிமிடம் இந்த மசாஜ் செய்து விட்டு, இரண்டு நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.
பிறகு அடுத்தபடியாக தான் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த கலவையை முகத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். முகம் முழுவதும் இந்த பேக்கை போட்டு அப்படியே 20 நிமிடங்கள் காய விட்டு விடுங்கள். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டாலே போதும். உங்களுடைய முகம் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் நல்ல வித்தியாசம் தெரியும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், இந்த பேஸ் பேக்கை முகத்தில் போடலாம். தயார் செய்த இந்த பேஸ் பேக்கில் இருந்து ஒரு பாகத்தை தனியாக டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால், ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சா போதுங்க இந்த கோடை காலத்தை ஈசியா சமாளிச்சிடலாம். அப்படி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?
இப்போது வரப்போவது வெயில் காலம். ஆகவே ஸ்கின் ட்ரை ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய காய்கறிகள், நிறைய பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களால் முடியும் என்றால் நட்ஸ் வகைகளை ஸ்னாக்ஸ் ஆக அளவோடு சாப்பிடுவது சருமத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. தினம் ஒரு நெல்லிக்காய், தினம் ஒரு பேரிச்சம்பழம், என்று சத்து நிறைந்த ஆகாரத்தை சாப்பிடுங்கள். ஃபேஸ் பேக்குடன் சேர்ந்த சரியான டயட்டும் உங்களுக்கு அழகான அழகை சீக்கிரம் தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.