
இன்று 10.9.2025 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6:45 மணி அளவில் சங்கடஹர சதுர்த்தி திதியானது பிறக்கவிருக்கிறது. இந்த திதி நாளை வியாழக்கிழமை மாலை 4:00 மணி வரை இருக்கிறது. ஆகவே பின் சொல்லக் கூடிய இந்த பரிகாரத்தை இன்று மாலை செய்தாலும் சரி, அல்லது நாளை வியாழக்கிழமை குரு வாரம், குபேரனுக்கு உரிய நாள், நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்தாலும் சரி அது உங்கள் சௌகரியம்.
உங்கள் வீட்டில் இருக்கும் பண தடை விலகும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். தலைவிரித்தாடும் பணப்பிரச்சனைக்கு உடனடியாக ஒரு தீர்வு தரக்கூடிய அந்த விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது? ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ஒரு சின்ன துண்டு வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். அதை தூள் செய்து கொள்ளுங்கள். அந்த தூள் செய்யப்பட்ட வெல்லத்தில் கொஞ்சமாக நெய்விட்டு பிசைந்தால் வெல்லம் இலகிவரும். அப்போது அதை மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல பிடித்து, ஒரு தட்டின் மேல் வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
இந்த பிள்ளையாருக்கு ஒரு குங்குமப்பொட்டு வைத்து, பூக்களால் அலங்காரம் செய்யுங்கள், ஒரு அருகம்புல் வையுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்களால் முடிந்த நிவேதியம் வைத்து, தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்து உங்களுடைய பிரார்த்தனையை விநாயகரிடம் வைக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதலை விநாயகரிடம் சொல்ல வேண்டும்.
இந்த வெல்லம் பிள்ளையாரை பிடித்து வைத்து சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகரை வீட்டிற்குள் அழைத்து, உங்களுடைய வேண்டுதலை வைத்துப் பாருங்கள். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும். வழிபாடு முடிந்தவுடன் இந்த வெல்லத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை என்ன செய்வது.
வழிபாடு நிறைவடைந்த பிறகு 24 மணி நேரம் உங்கள் வீட்டில் இந்த பிள்ளையார் இருக்கட்டும். அதன் பிறகு ஒரு சுத்தமான பாத்திரத்தில், சுத்தமான தண்ணீர் எடுத்து இந்த பிள்ளையாரை கரைத்து மண்பாங்கான இடத்தில் ஊற்றி விடலாம். இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு. உங்களுடைய கசப்பான பணக்கஷ்டம், இனிப்பான வருமானமாக மாற, இந்த வழிபாட்டை செய்ய யாரும் தவற விடாதீங்க.
இதையும் படிக்கலாமே: ராஜ வாழ்க்கை தரும் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
ஒரு முறை இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி அன்று செய்தால் அடுத்த சங்கடஹர சதுர்த்தி வருவதற்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்கஷ்டம் ஒன்று தீர்ந்திருக்கும். இது நிதர்சனமான உண்மை நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு ஏமாற்றம் இல்லை என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.