- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

பட்டுப் போன்ற கூந்தலை பெற உதவும் வெண்டைக்காய்

கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. விசேஷகரமான நாட்களாக இருந்தாலும் சரி சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதாக இருந்தாலும் சரி, இந்த சிகை அலங்காரத்திற்கு என்று நேரத்தை கண்டிப்பான முறையில் ஒதுக்கத்தான் செய்வோம். எவ்வளவுதான் நேரத்தை ஒதுக்கினாலும் நம்முடைய மூடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருந்தால்தான் எந்த ஒரு சிகை அலங்காரத்தையும் நம்மால் செய்ய முடியும். மிருதுவாகவும் பட்டு போலவும் வைத்துக் கொள்வதற்கு வெண்டைக்காயை வைத்து எந்த முறையில் ஹேர் பேக் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இன்றைய காலத்தில் சிகை அலங்காரத்திற்கென்று தனியாக படிப்பு வந்துவிட்டது. ஒரு திருமண நிகழ்ச்சி என்றால் அங்கு வருபவர்களுடைய சிகை அலங்காரத்தை பார்ப்பதற்கென்றே ஒரு சில பேர் வருவார்கள். அந்த அளவிற்கு மிகவும் வித்தியாசமான அழகான சிகை அலங்காரம் நடக்கும். இப்படி நாம் அழகாக சிகை அலங்காரம் செய்து கொள்வதாக இருந்தாலும் அல்லது சாதாரணமாக நாம் சென்றாலும் நம்முடைய கூந்தல் பட்டுப்போன்று மிருதுவாக இருக்க வேண்டும்.

- Advertisement -

எவ்வளவு தான் சிக்கு மிகுந்த முடியாக இருந்தாலும், வறண்ட முடியாக இருந்தாலும், சுருட்ட முடியாக இருந்தாலும், அதை மிருதுவாகவும் பட்டு போன்று பளபளப்பாகவும் ஆக்கக்கூடிய ஒரு பொருள்தான் வெண்டைக்காய். இந்த வெண்டைக்காயை பயன்படுத்தி ஹேர்பேக் போடுவதன் மூலம் மிருதுவான கூந்தலை பெறுவதோடு மட்டுமல்லாமல் நம் தலை முடிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.

இதற்கு ஐந்து வெண்டைக்காயை எடுத்து சுத்தமாக கழுவி விட்டு ஒன்று இரண்டாக நறுக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் ஆகும் வரை வத்த விட வேண்டும். குறைந்த தீயில் தான் வைத்திருக்க வேண்டும். இது ஆறியதும் இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஒரு மெல்லிய காட்டன் துணியை பயன்படுத்தி வடிகட்டி கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு ஸ்பூன் ஆளி விதையை இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அது ஒரு கிளாஸ் ஆக மாறியதும் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தண்ணீரை மற்றும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீர் ஆறியதும் ஜில்லாக மாறிவிடும். இந்த ஜெல்லை நாம் அரைத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் விழுதுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஹேர்பேக் தயாராகி விட்டது. இந்த ஹேர் பேக்கை நம்முடைய தலையில் தடவுவதற்கு முன்பாக சிறிதளவு தலையில் எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஹேர்பேக்கை நன்றாக வேர்க்கால்களில் படும் அளவிற்கு தடவ வேண்டும். பிறகு முடி முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும். இந்த முறையில் நாம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமாவது செய்தோம் என்றால் இதில் இருக்கக்கூடிய வெண்டைக்காய், ஆளி விதை, முட்டை இவற்றின் உதவியால் நம்முடைய கூந்தல் பட்டுப்போல மின்ன ஆரம்பிக்கும். அதோடு முடி உறுதியாக மாறும். முடி உதிர்தல் பிரச்சனையும் நிற்கும்.

இதையும் படிக்கலாமே: கருத்த உதடும் பிங்க்காக மாற

கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய கூந்தலை பட்டு போல மாற்றிக் கொள்ள முடியும்.

- Advertisement -