
இன்றைய சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் அபூர்வமாக தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சிறுவயதிலேயே உடம்பில் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து விடுகிறது. இவ்வாறு வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு விட்டால் அவர்களின் வளர்ச்சியில் பலவித தடைகள் ஏற்படும். அவர்கள் வளர்ச்சியில் தடை ஏற்பட்டால் அவர்கள் ஞாபகத் திறன் குறைந்து படிப்பிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. அதுபோல இப்போது அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை, கால்சியம் குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதற்குத் தீர்வாக இந்த கருவேப்பிலை தொகை சிறிதளவு தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அனைத்து வித பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும். வாருங்கள் அனைவரும் சாப்பிடும் அளவிற்கு இந்த சுவையான கருவேப்பிலை தொக்கை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன், பூண்டு – ஐந்து பல், வர மிளகாய் – 4, எண்ணெய் – 3 ஸ்பூன், கல் உப்பு – முக்கால் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கப் கருவேப்பிலையை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது புளியை ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊற வைத்த புளியை கெட்டியாக கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தவாவை அடுப்பின் மீது வைக்க வேண்டும். தவா நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு இதில் அலசி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுபடும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க கொள்ள வேண்டும்.
பிறகு கருவேப்பிலையை வேறொரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அதே தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம், 2 ஸ்பூன் தனியா சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 5 பல் பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து அனைத்தையும் வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றையும் கறி வேப்பிலையுடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மறுபடியும் தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் கரைத்து வைத்துள்ள கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதித்து பச்சை வாசனை சென்றதும், அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து இவை தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.