- Advertisement -
- Advertisement -

நம் கர்ம வினைகள் பின் தொடர்வதால் நிறையவே துன்பங்களை வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து விமோசனம் கிடைப்பது என்பது முடியாதது. ஒருவன் செய்த பாவத்திற்கு உரிய தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதியாகும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பது போல, சில விஷயங்களை செய்து, நம் கர்ம வினை பாவ கணக்குகளை குறைத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு அற்புதமான பலன் தரக் கூடியது இந்த வெட்டிவேர் தீபம்! வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால் மேலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.

வெட்டிவேர் என்பது நல்ல ஆற்றல்களை வெளியிடக்கூடிய மூலிகை வேராகும். இந்த வேரை கொண்டு பல ஆன்மிக பலன்களை பெற்றுக் கொள்ளலாம். வெட்டிவேர் ஹோமம் செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெட்டிவேர் கொண்டு பல ஆரோக்கிய நன்மைகளும் அனுபவித்துக் கொள்ளலாம். வெட்டிவேர் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வெட்டிவேர் மகாலட்சுமிக்கு இணையானது.

- Advertisement -

வெட்டிவேரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. வெட்டிவேர் இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இருக்கும் என்பார்கள். இந்த வெட்டிவேரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும். இதை வாங்கி வந்து ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு அதில் நீரை நிரப்பி வரவேற்பு அறையில் வைத்தால் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் வெளியேறும், பாசிட்டிவான வைப்ரேஷன்கள் வீடு முழுவதும் பரவும்.

மேலும் இதைக் கொண்டு தீபம் ஏற்றுவதால் செல்வ வளமானது உயர ஆரம்பிக்கும். வீட்டில் சுபகாரிய தடைகள் இருந்தாலும், அது விலகும். திருமணம் கைகூடி வராமல் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் தொழிலில் வளர்ச்சி இல்லாமல் நஷ்டத்தை காண்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம். குடும்பத்தில் நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை என்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு வெற்றியை தரக்கூடியது இந்த வெட்டிவேர். இதை ஒரு வெள்ளை துணியில் மூட்டை கட்டி ஃபிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பொழுது சுத்தமான காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் வெட்டிவேரையும் சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றி மகாலட்சுமி ஸ்தோத்திரங்களையும், மந்திரங்களையும் உச்சரித்து மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

வெட்டிவேர் கொண்டு தீபம் ஏற்றுவதால் தோல்விகளும், அவமானங்களும் உங்களை விட்டு நீங்கி தொடர் வெற்றிகளை குவிப்பீர்கள். பெண் பார்க்க செல்கிறீர்கள் அல்லது நேர்காணலுக்கு செல்கிறீர்கள், பரீட்சை எழுத போகிறீர்கள், புதிதாக தொழில் துவங்க இருக்கிறீர்கள், நிலம், வீடு வாங்க போகிறீர்கள் என்று எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுதும், இந்த வெட்டிவேரை கொண்டு மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றிவிட்டு பின்பு நீங்கள் சென்றால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
தேர்வுக்கு செல்வதற்கு முன்பு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம்

இவ்வளவு பலன்களை தரக்கூடிய இந்த வெட்டிவேர் தீபத்தை காமாட்சி அம்மன் விளக்கில் தவிர, வேறு எந்த விளக்கிலும் போட்டு பயன்படுத்தாதீர்கள். கஜலட்சுமி விளக்கு, வெள்ளி விளக்கு போன்றவற்றிலும் இதை போட்டு வீட்டில் தீபம் ஏற்றலாம். வெட்டிவேர் தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் அமங்கலமான சொற்களை யாரும் உபயோகிக்க கூடாது. கணவன் மனைவிக்குள் சண்டை கூடவே கூடாது. மகிழ்ச்சியின் சத்தம் இருக்கும் இல்லத்தில், வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால், கிடைக்கக்கூடிய பலன்களும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -