- Advertisement -
வீட்டு குறிப்புகள்

உங்க வீட்டு குழந்தைங்க சுவத்துல அவங்க கைவண்ணத்தை காட்டிட்டாங்களா, நோ டென்ஷன் அத ஈசியா கிளீன் பண்ணிடலாம். வாங்க எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

குழந்தைகள் இல்லாத வீடு வீடே இல்லை அப்படின்னு தான் சொல்லணும். ஆனா அப்படி குழந்தைகள் இருக்க வீட்டுல அவங்க பண்ற சேட்டை இருக்கே அதை அனுபவிக்கிறவர்களுக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும். அதுவும் அவங்க முதன் முதலில் எழுத பழக ஆரம்பிக்கும் போது அவங்க கைவண்ணம் நோட்டு, சிலேட், போர்டு, இதையெல்லாம் தாண்டி வேற லெவல்ல வீட்டு சுவற்றில் தான் முதல் குறி வைப்பாங்க. இந்த பிரச்சனை எல்லாருக்கும் பொதுவானது தான். ஆனால் சொந்த வீட்ல இருக்கவங்க ஓரளவுக்கு பரவாயில்ல, வாடகை வீட்டில் இருக்கும் போது இது மாதிரி எல்லாம் பண்ணிட்டாங்கன்னா அவ்வளவு தான் ஹவுஸ் ஓனர் கிட்ட திட்டு வேற வாங்கணும். இனி இந்த பிரச்சனையே உங்களுக்கு இருக்காது கிளீன் பண்றது எப்படின்னு இந்த பதிவை படித்து தெரிந்து கொண்டு இனி தாராளமா நீங்க உங்க பிள்ளைங்க கைல கலர் பென்சில் கொடுத்து செவுத்துல எழுத சொல்லுங்க.

அதற்கு முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கோங்க அடுத்ததா அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வினிகர் சேர்த்துட்டு, பின் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சமையல் சோடா இந்த மூன்றையும் சேர்த்து ஒரு ஸ்பூன் வெச்சி நல்லா கலந்து விட்டுருங்க. இத ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி ஸ்டோர் பண்ணி வச்சுருங்க. ( இதுல வாசனை வேணும்னு நினைக்கிறவங்க உங்கள் வீட்டில் இருக்க ஷாம்பூ, பாடி ஸ்பிரே ஏதாவது கலந்து கொள்ளலாம். வேண்டாம்னு நினைக்கிறவங்க அப்படியே யூஸ் பண்ணலாம்).

- Advertisement -

சரி இத வச்சு இப்போ சுவற்றை எப்படி சுத்தம் செய்யறதுன்னு பாக்கலாம். முதல்ல உங்க பிள்ளைங்களோட கை வண்ணத்துக்கு மேல இந்த தண்ணிய ஸ்பிரே பண்ணி விட்டுடுங்க. ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே இருக்கட்டும் அதை நல்லா சுவற்றில் ஊறும் வரைக்கும் வெயிட் பண்ணுங்க.அப்புறமா ஒரு காட்டன் துணி எடுத்து அதுக்கு மேல தொடச்சி விடுங்க. அப்படியும் போகலையா அந்த காட்டன் துணில இன்னும் கொஞ்சம் சமையல் சோடாவை கொட்டி திரும்பவும் ஸ்ப்ரே அடிச்சு துடைங்க. ரொம்ப நாள் ஆன கரையா இருந்தா ஒரு தடவை துடைக்கும் போதே போவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும். அதுக்கு இந்த முறையை ட்ரை பண்ணுங்க அவ்வளவு தாங்க தொடச்சி முடிச்சிட்டுபாருங்க சுவத்துல இருந்த கறை காணாம போயிருக்கும்.

இந்த டிப்ஸ் இதுக்கு மட்டும் இல்லங்க. இப்பல்லாம் பெரும்பாலும் எல்லா வீட்லயும் எழுதுறதுக்கு பிளாக் அண்ட் ஒயிட் போர்டு வாங்கி வச்சிருக்காங்க. இதுல எழுத மார்க்கர், பர்மிட் மார்க்கர்,இரண்டும் இருக்கும் .ஒரு சில மார்க்கரல எழுதிட்டு அழிச்சாலே போயிடும். ஒரு சில மார்க்க எழுதின பிறகு அந்த போர்டில் இருக்ககும் கறை போகாது. அது மாதிரி சமயத்துல கூட இந்த ஸ்பிரேவை யூஸ் பண்ணி அந்த போர்ட துடைச்சா அந்த கறை கூட போய்டும்.

- Advertisement -

அதே போல உங்க குழந்தையோட சிலேட் எழுதி, எழுதி நாளடைவில் அதில் கோடு மாதிரி வந்திருக்கும். இந்த கோடு நீங்க தண்ணி வச்சு தொடச்சாலும் எதை வைத்து தொடச்சாலும் போகாது. அதுலயும் இந்த ஸ்பிரே கொஞ்சம் அடிச்சிட்டு தொடச்சு பாருங்க புதுசா வாங்கின சிலேட் போலவே மாறிடும்.

இதையும் படிக்கலாமே: சமையலுக்கு வாங்கிய காய்கறி ரொம்ப நாள் வாடாமல் இருக்கணுமா? அதுவும் பிரிட்ஜ்ல் வைக்காமலே! இதோ அதுக்கான டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

குழந்தைகள் அவங்க விருப்பப்படி ஜாலியா சுவத்துல அவங்க கைவண்ணத்தை காட்டி விளையாடி முடிச்சதும், நீங்க உங்க கை வண்ணத்த காட்டுங்கள். இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -