- Advertisement -

விபத்து ஏற்படாமல் இருக்க கருட பஞ்சமி வழிபாடு

- Advertisement -

பெருமாளுக்கு வாகனமாக இருப்பவர் கருடன். அந்த கருட பகவானுக்கு சிறப்பு வாய்ந்த நாள் தான் இன்றைய தினம். கருட பஞ்சமி. உங்களுடைய வீட்டில் இந்த கருட பஞ்சமி வழிபாட்டை எப்படி எளிமையாக மேற்கொள்வது என்பதை பற்றி ஆன்மீகம் சார்ந்த பதிவுதான் இது.

இந்த வழிபாட்டை மேற்கொண்டால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி வாகன விபத்து நேராமல் இருக்கும், வாகனத்தில் அடிக்கடி பயணம் செல்பவர்களும் பாதுகாப்பாக உங்களுடைய பயணத்தை மேற்கொள்ளலாம், இது தவிர மன பயம் உள்ளவர்கள் இன்று கருட வழிபாட்டை மேற்கொள்ளலாம். கோழையாக இருப்பவர்களுக்கும் இன்றைய தினம் வழிபாடு தைரியத்தை கொடுக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று செய்ய வேண்டிய கருட வழிபாடு

இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலும் எல்லோர் வீட்டு பூஜை அறையில் சுத்த பத்தமாக பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தான் இருக்கும். அதனால் பிரச்சனை இல்லை. பெருமாளுக்கு கொஞ்சம் துளசி இலைகளை சூட்டுங்கள். வீடுகளில் கருட பகவானின் திருவுருவப்படம் இருக்காது. பரவாயில்லை, பெருமாளின் வாகனம் தான் கருட பகவான். பெருமாளையே கருடனாக நினைத்துக் கொள்ளுங்கள் போதும்.

பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கல் நெய்வேத்தியம் தயார் செய்து வைக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் இரண்டு வாழைப்பழம் நெய்வாதியமாக வைத்து தீபம் ஏற்றி மனம் உருகி பெருமாளை நினைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் துளசி இலைகளால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சனை செய்யும்போது ‘ஓம் நமோ கருடாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு மனம் உருகி பிரார்த்தனை வையுங்கள். என்னுடைய கணவரோ என்னுடைய பிள்ளைகளோ வாகனத்தில் செல்லும்போது ஜாக்கிரதையாக சென்று வீடு திரும்ப வேண்டும். விபத்து நேரக்கூடாது அல்லது நீங்களே வண்டி வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால், நான் வண்டி வாகனம் ஓட்டும் போது விபத்து நேர கூடாது என்று மூன்று முறை கருட பகவானிடம் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக வாகனத்தில் செல்லும்போது உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக அந்த கருட பகவானே இருப்பார் என்பது நம்பிக்கை.

வெறும் இரு சக்கர வாகனத்துக்கு மட்டும் இது பொருந்தாது. நாம் வண்டி ஓட்டவில்லை என்றாலும், பேருந்தில் செல்லும்போது கூட விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் விபத்து தவிர்க்க முடியாத ஒன்று. எதிர்பாராத எந்த சூழ்நிலையிலும் பயணத்தின் போது விபத்து நேர கூடாது என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இன்றைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு பெருமாளுக்கு வைத்த நெய் வைத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுங்கள் முடிந்தால் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கருட பஞ்சமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

முடிந்தால் அப்படியே வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு சென்று கருடாழ்வாரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அந்த கருட பகவானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். பெருமாளின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -