- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இப்படி செய்தால் 30 நாட்களுக்கு முடி மீண்டும் வளரவே வளராது. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீக்க இது ஒரு பெஸ்ட் டிப்ஸ்.

- Advertisement -

பெண்களுக்கு முகத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத முடிகளை அகற்றுவது என்பது மிகவும் சிரமமான காரியம். இப்படி முகத்தில் அழகைக் குறைக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பல அழகு குறிப்புகள் உள்ளது. சில அழகு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் முடி சீக்கிரம் வளர்ந்து விடும். சில அழகு குறிப்புகளை பின்பற்றினால் முடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படும். சில பேர் ரைசர் வைத்து சேவிங் செய்வார்கள். சில பேர் த்ரெட்டிங் செய்வார்கள். சிலர் வேக்ஸிங் செய்து கொள்வார்கள்.

ஒவ்வொரு முறையும் பார்லருக்கு சென்று த்ரெட்டிங் வேக்சிங் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ரைசர் பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி கொஞ்சம் சீக்கிரமாக இருக்கும். அதனால் ரைசர் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். த்ரெட்டிங் செய்யும் போதும் முடி வளர்ச்சி கொஞ்சம் வேகமாக தான் இருக்கும். ஆனால் வேக்சிங் செய்யும் போது முடி வளர்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். வீட்டிலிருந்தபடியே குறைந்த செலவில் வேக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இப்படி வேக்ஸ் செய்வதன் மூலம் நீங்கள் நீக்கிய முடியானது ஒரு மாதம் வரை வளராமல் இருக்கும். (இந்த வேக்ஸ் உதட்டுக்கு மேல் பக்கம், தாடை பகுதி, நெற்றிப் பகுதி, கை, கால்கள், அக்குள் பகுதிக்கு மட்டும் பயன்படுத்துங்கள். கன்னத்தில் இருக்கக்கூடிய முடியை நீக்க பயன்படுத்தாதீர்கள்.)

- Advertisement -

எலுமிச்சம் பழச்சாறு – 1/4 கப், வெள்ளை சர்க்கரை – 1/4 கப், தண்ணீர் – 1/4 கப், இந்த மூன்றையும் சம அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் எடுத்துக் கொண்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். உங்கள் தேவைக்கு ஏற்ப இதை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

சம அளவில் எடுத்து வைத்திருக்கும் இந்த 3 பொருட்களையும் ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்து கேரமல் பதத்திற்கு வரும். லேசான பிரவுன் நிறம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை வைத்து தான் வேக்ஸ் செய்ய வேண்டும். முதலில் வேக்ஸ் செய்ய வேண்டிய இடத்தில் கொஞ்சமாக பவுடரை அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, ஒரு ஸ்பூனிலோ அல்லது கத்தியிலோ இந்த வேக்ஸ் க்ரீமை எடுத்து எந்த இடத்தில் முடியை நீக்க வேண்டுமோ அந்த இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ரொம்பவும் சுட சுட இதை அப்ளை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஜாக்கிரதையாக கை பொறுக்கும் சூடு இருக்கும் போது அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த வேக்ஸுக்கு மேலே ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக அழுத்தி அப்படியே எதிர் பக்கமாக இழுத்தால் முடி அனைத்தும் இந்த வேக்சில் ஒட்டி நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தயார் செய்த வேக்ஸ் ஆறிவிட்டால் கொஞ்சம் கெட்டியாகிவிடும். கவலைப்பட வேண்டாம்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக சூடு செய்து, அந்த சுடு தண்ணீரில் இந்த வேக்ஸை வைக்கும் போது அது மீண்டும் உருகத் தொடங்கும். உருகிய பின்பு மீண்டும் அதை நீங்கள் வேக்ஸ் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். கடாயில் வேக்ஸ் தயாரான பின்பு அதை உடனடியாக ஒரு சில்வர் பாத்திரத்தில் மாற்றி விட்டு அதன் பின்பு நீங்கள் இதை பயன்படுத்த தொடங்குங்கள்.

தேவைப்பட்டால் இந்த சில்வர் டப்பாவை அப்படியே சுடு தண்ணீரில் வைத்து சுலபமாக வேக்ஸ் செல்லை மீண்டும் உருக்கி பயன்படுத்தலாம். வேக்ஸ் மீதமாகிவிட்டாலும் அதே சில்வர் டப்பாவில் மூடி போட்டு ஸ்டோர் செய்தால், இந்த வேக்ஸ் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்வதாக இருந்தால் பிரிட்ஜில் ஸ்டோர் செய்யலாம். வேக்ஸ் காய்ச்சும் போது பாகுபதம் மிகவும் முக்கியம். ரொம்பவும் காய்ச்சிவிட்டால் மிட்டாய் போல கட்டியாகிவிடும். காய்ச்சும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்ச்சுங்க. இரண்டு கைகளுக்கு தேவையான வாக்ஸ் ஜெல் தயாரிக்க 10 லிருந்து 15 நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக உங்களுடைய தேவையற்ற முடிகளை நீக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -