- Advertisement -
பொது பலன்

எந்த ராசிக்காரர் எந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு முன்னாள் எப்படி நல்ல நேரம் பார்க்கிறோமோ அதே போல் அன்றைய நாள் உங்களுக்கு நன்மை அளிக்குமா என்பதையும் பார்ப்பது நல்லது. இதை அறிய அந்த நாளுக்குரிய திதி என்ன என்று உங்கள் காலண்டரில் பார்த்தாலே போதும். ஏன் என்றால் சில திதிகள் சில ராசிகளை பாதிக்கும். அந்த வகையில் எந்த திதிக்குரிய நாளில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் “சஷ்டி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் “சதுர்த்தி, திரயோதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் “பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் “சப்தமி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் “திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் “பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் “பிரதமை, துவாதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் “நவமி, தசமி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் “துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் “பிரதமை, திருதியை, துவாதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் “சதுர்த்தி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் “துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

- Advertisement -
Published by