- Advertisement -
- Advertisement -

வரக்கூடிய நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள். வரக்கூடிய வியாழக்கிழமை தான், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழும். மற்ற நாள் சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, இந்த 6ஆம் நாள், கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். சக்தி வாய்ந்த இந்த நாளில் திருச்செந்தூர் முருகனை நினைத்து நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த வருடம், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் இருந்தே திருச்செந்தூர் முருகனை நினைத்து செய்தால், அடுத்த வருடம் முருகனுக்கு 6 நாளும் விரதம் இருக்கக் கூடிய பாக்கியம் கூட உங்களுக்கு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்கள் குடும்பம் மீளா துன்பத்திலிருந்து சீக்கிரமாக மீண்டு வரவும் இந்த பரிகாரம் வழிவகுக்கும்.

- Advertisement -

பொதுவாக வியாழக்கிழமை என்றால் அது குருவுக்கு உகந்த நாள். திருச்செந்தூரை குருஸ்தலம் என்றும் சொல்லுவார்கள். அந்த முருகனின் அருளால் இந்த வருட சூரசம்காரமானது வியாழக்கிழமை அன்றே வந்திருக்கிறது. ஆகவே இந்த சக்தி வாய்ந்த நாளில் ஒவ்வொருவரும் நிச்சயம் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, முருகா இன்றைய நாள் விரதத்தை நல்லபடியாக கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி விரதத்தை துவங்குங்கள்.

உங்களுக்கு உடம்பு ரொம்பவும் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கிறது, வெறும் தண்ணீர் மட்டும் பருகி விரதம் இருக்க முடியும் என்றால் காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை வெறும் தண்ணீரை மட்டும் பருகி முருகனுக்காக அந்த நாள் விரதத்தை மேற்கொள்ளலாம். முடியாது என்பவர்கள் அவரவர் சவுகரியத்திற்கு சாப்பிட்டு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தவறு கிடையாது.

- Advertisement -

நவம்பர் 7ஆம் தேதி மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும். அதை டிவியிலேயே நேரடி ஒளிபரப்பாகும். அதை பார்த்துவிட்டு, தலைக்கு குளித்துவிட்டு வந்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகனுக்கு உங்களால் முடிந்த சர்க்கரை பொங்கலோ அல்லது இனிப்பு பலகாரங்கள் வேறு ஏதாவது செய்து நெய்வேதியம் வைக்க வேண்டும். கூடவே 3 மிளகு உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிவப்பு நிற துணியில் இந்த 3 மிளகை வைத்து முடிச்சாக கட்டி உங்கள் உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, ‘முருகா அடுத்த வருடம் உனக்காக ஆறு நாட்களும் விரதம் மேற்கொள்ளக்கூடிய பாக்கியத்தை எனக்கு கொடு, என்னுடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும், என்னுடைய இந்த வேண்டுதல் நிறைவேறிய உடனே உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்கின்றேன் என்று’ வேண்டிக்கொண்டு, இந்த முடிச்சை முருகனது பாதத்தில் வையுங்கள்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கையில் மீள முடியாத துன்பம் என்னவோ அதை நினைத்து, ஒரு பிரார்த்தனை வையுங்கள். முதலில் உங்கள் வீட்டில் தலைவிரித்து ஆடக்கூடிய பிரச்சனை எது, அது சரியாக வேண்டி இந்த முடிச்சை முருகனின் திருவுருவ பாதத்தில் வைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து முருகனை வணங்கி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். முருகனுக்கு வைத்த பிரசாதத்தை சாப்பிட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இது எளிமையான கந்த சஷ்டி 6ஆம் நாள் விரத வழிபாடு.

நம்முடைய வீட்டில் முருகனின் பாதத்தில் மிளகு முடிச்சு வைத்திருக்கிறோம் அல்லவா. அதை என்ன செய்வது. நீங்கள் ஒரு கோரிக்கையை முருகப்பெருமானிடம் வைத்திருக்கிறீர்கள். அது இந்த வருடத்திற்குள் நிச்சயம் நிறைவேறும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அந்த வேண்டுதல் நிறைவடைந்த உடன் இந்த முடிச்சை கொண்டு வந்து திருச்செந்தூர் கடலில் சேர்த்து விடுவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறியவுடன் அந்த முடிச்சை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கடலின் நீராடும்போது உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த முடிச்சை கடலில் வீசிவிடுங்கள். எங்களால் திருச்செந்தூர் செல்ல முடியாது என்ற காரணத்தை சொல்லக்கூடாது. உங்களுடைய வேண்டுதல் நிறைவேறின பிறகு கோவிலில் எப்போது கூட்டம் குறைவாக இருக்கிறதோ, அந்த நாளில் திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசனம் செய்து கொள்ளலாம்.

சஷ்டி விரதத்தின் போது தான் முருகப்பெருமானை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் கிடையாது. இந்த எளிமையான பரிகாரத்தை வரக்கூடிய வியாழக்கிழமை சூரசம்ஹார முடிந்த பிறகு, உங்கள் வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை நினைத்து செய்து பாருங்கள். நிச்சயமாக அந்த முருகனின் அருளால் உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்.

குறிப்பாக குழந்தை வரம் வேண்டும், திருமணம் பாக்கியம் தேவை, சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் சுமை குறைய, கணவரை திருத்த, பிள்ளைகளின் நல்வழிப்படுத்த, குடும்பம் சீர்பட, என்று இதுபோல தலை மேல் நிற்கும் பாரத்தை இறக்கி வைக்க இந்த மிளகு பரிகாரம் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

இதையும் படிக்கலாமே: சஷ்டி விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

முடிந்தால் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறினால், உங்களால் முடியும் என்றால் அடுத்த வருடம் சஷ்டி விரதத்தில் மிளகு விரதம் இருப்பதாகவும் வேண்டிக் கொள்ளலாம்.  நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு, இந்த வருடம் கிடைத்த வரம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -