- Advertisement -

1-7-2025 நாளை குலதெய்வ வழிபாடு சிறப்பு பலன்

- Advertisement -

ஒரு குடும்பம் சீரோடும் சிறப்போடும், செழிப்போடும் வாழ வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வ ஆசீர்வாதம் ரொம்ப ரொம்ப அவசியமாக தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை நாளைய தினம் தரிசனம் செய்தால் மூன்று மடங்கு பலன் உங்களை வந்து சேரும்.

அதாவது மூன்று தலைமுறைக்கு உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக செழிப்போடு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் வாழும் என்பது நம்பிக்கை. அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு இருக்கிறது. ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும். நாளை 1-7- 2025 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12:33 மணிக்கு பிறகு, உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது. 2-7-2025 புதன்கிழமை மதியம் 2:00 மணி வரை உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று, உங்கள் குல வழக்கப்படி வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் குடும்ப கஷ்டம் உடனடியாக தீரும்.

உங்களுடைய குலதெய்வம் கட்டுண்டு கிடைக்கிறது குலதெய்வம் வீட்டில் இல்லை குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கவில்லை, குலதெய்வத்தின் சாபம் இருக்கிறது. குடும்பத்தில் மிகப்பெரிய கஷ்டம் இருக்கிறது. என்ற பிரச்சனை எல்லாம் உங்களுக்கு இருந்தா, இந்த நாளை தவிர விடாதீங்க. குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் இந்த நாளில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது.

- Advertisement -

வீட்டில் கட்டாயம் எல்லோருக்கும் குலதெய்வத்தின் திரு உருவப்படம் இருக்கும். அந்த திருவுருவப்படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்கள் வீட்டு வழக்கப்படி உங்க குல தெய்வத்தை எப்படி கும்பிடுவிங்களோ, அதேபோல குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குலதெய்வத்திற்கு இந்த நாளில் சின்னதாக ஒரு பூஜை செய்யுங்கள். நிச்சயமாக மூன்று மடங்கு பலம் உங்கள் குடும்பத்தை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க பரிகாரம்

மாசி மாத சிவராத்திரி அன்று சிவனை கும்பிட்டால் எந்த அளவிற்கு புண்ணியம் கிடைக்குமோ? மாசி மாத சிவராத்திரி அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்லுவார்களோ, அதைவிட மூன்று மடங்கு நல்லது ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது. இந்த நன்னாளை நாம் தவறவிடலாமா. குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற இதைவிட நல்ல நாள் நமக்கு கிடக்காது. குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு சேர்த்து நம்முடைய முன்னோர்களும் ஆசிர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு சமர்ப்பணம்.

- Advertisement -