- Advertisement -
சமையல் குறிப்புகள்

ரவை இருக்கா உங்க வீட்டுல? 10 நிமிடத்தில் சுவையான இந்த பிரேக் ஃபாஸ்ட் தயார்.

- Advertisement -

இட்லி தோசையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு காலை நேரத்தில் சுலபமாக சுவையான ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபியை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தோசையை கொஞ்சம் காய்கறிகளோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகளுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். அதேசமயம் இதனுடைய சுவையும் எந்த விதத்திலும் குறைந்ததாக இருக்காது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஊத்தப்பம் ரெசிபி உங்களுக்காக.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ரவை – 1 கப், நன்றாக வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்தது – 2, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி மைய விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த விழுதை தனியாக ஒரு பௌலில் மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது அரைத்து வைத்திருக்கும் இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/4 கப், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1/4 கப், கேரட் துருவல் – 1/4 கப், குடை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், இஞ்சித் துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இன்னும் கொஞ்சம் தேவையான அளவு தண்ணீர்,  அதாவது 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி இந்த மாவை நன்றாக கலந்து கொடுங்கள். ஊத்தப்பம் வார்க்க தேவையான மாவு இப்போது நமக்கு தயாராக கிடைத்துள்ளது.

அடுப்பில் ஒரு தோசைக்கல் அல்லது பேன் வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் தடவி சூடானதும் இந்த மாவை எடுத்து கல்லில் வார்த்து லேசாக அப்படியே ஊத்தப்பம் போல பரப்பி விடவேண்டும். மெல்லிசாக தேய்க்க வராது. தோசை மாவை கல்லில் ஊற்றி கரண்டியால் பரப்பி விடுங்கள். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மேலே ஒரு மூடி போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் இதை நன்றாக வேக வையுங்கள்.

- Advertisement -

பிறகு மூடியை எடுத்து விட்டு தோசையை திருப்பி போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சூப்பரான ரவை ஊத்தப்பம் தயார். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார், கார சட்னி எது வேண்டுமென்றாலும் சுவையாக இருக்கும். வெறும் வெங்காய தயிர் பச்சடி வைத்து சாப்பிடவும் சுவையாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா இன்னிக்கி ராத்ரி ட்ரை பண்ணி பாருங்க. முடியலன்னா நாளைக்கு காலையில ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -