- Advertisement -
- Advertisement -

இந்தப் பிரபஞ்சத்தில் பலவிதமான தேவதைகள் நிறைந்திருக்கிறார்கள் என்றும் அந்த தேவதைகளை நாம் சரியான நேரத்தில் நினைத்து வழிபாடு செய்யும்பொழுது அந்த தேவதைகளின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தேவதைகளின் அருளை பெறுவதற்கான உதவக்கூடிய நாளை தான் ஏஞ்சல் டே, மேஜிக் டே என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சில கூட்டுத்தொகைகள் வரக்கூடிய நாட்களையும் ஒரு சில எண்கள் திருப்பி வரக்கூடிய நாட்களையும் இந்த வரிசையில் கொண்டு வருவது உண்டு. அந்த வகையில் அக்டோபர் மாதம் என்பது பத்தாவது மாதம் ஆகவும், அந்த பத்தாவது மாதத்தில் வரக்கூடிய பத்தாம் தேதி மேஜிக் டே ஆகவும் கூறப்படுகிறது. இந்த நாளில் நாம் நம்முடைய வேண்டுதலை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். அப்படி வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேண்டுதலை நிறைவேற்றும் 1010

இந்த பரிகாரத்தை நாம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 10:59 மணிக்குள்ளோ அல்லது இரவு 10 மணியிலிருந்து 10:59 மணிக்குதோ செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக 10:10ல் வரக்கூடிய அந்த ஒரு நிமிடத்தில் இந்த பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது நமக்கு கூடுதல் பலன் உண்டாகும் என்றே கூறலாம். இந்த பரிகாரத்தின் மூலம் நம்முடைய வேண்டுதலை நேரடியாக பிரபஞ்சத்திடம் முன்வைக்கிறோம். அப்படி பிரபஞ்சத்திரம் முன்வைக்கும் பொழுது வேண்டுதல் நிறைவேறி விட்டதாக நினைத்து நன்றி கூற வேண்டும்.

- Advertisement -

இந்த மேஜிக் நாளில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டதாக பிரபஞ்சத்திடம் நாம் கூறும் பொழுது பிரபஞ்சம் அந்த வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றும். இதற்கு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு நிறத்தை தவிர்த்து மீதம் எந்த நிறமாக இருந்தாலும் அந்த நிற பேனாவை பயன்படுத்தி நம்முடைய வேண்டுதலை எழுதலாம். இந்த வேண்டுதலை நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி தான் எழுத வேண்டும். அதேபோல் அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுத வேண்டும்.

உதாரணமாக கடன் பிரச்சினை தீர வேண்டும் என்னும் பட்சத்தில் எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ அந்த பணம் கிடைத்துவிட்டது என்று எழுத வேண்டும். கடன் என்ற எதிர்மறை வார்த்தையை உபயோகப்படுத்த கூடாது. அதேபோல் வேண்டும் என்றும் கூறக்கூடாது. கிடைத்துவிட்டது, பெற்று விட்டேன் என்று கூற வேண்டும். இப்படி நம்முடைய வேண்டுதலை எழுதுவதற்கு முன்பாக 1010 என்று எழுதி பிறகு வேண்டுதலை எழுதவேண்டும். அதாவது 1010 எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்துவிட்டது என்று எழுத வேண்டும்.

- Advertisement -

இப்படி வேலை கிடைத்துவிட்டது, சொந்த வீடு அமைந்துவிட்டது, குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து விட்டார்கள், உடல் ஆரோக்கியமாக இருக்கிறது, பிடித்த மண வாழ்க்கை அமைந்துவிட்டது, இப்படி நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுத வேண்டும். இதை நாம் 27 முறை எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் நம்முடைய வேண்டுதலை எழுதுவதற்கு முன்பாக 1010 என்று எழுதி வேண்டுதலை எழுத வேண்டும். ஒரே வேண்டுதலை தான் 27 முறையும் எழுத வேண்டும். இவ்வாறு எழுதி முடித்துவிட்டு இந்த பேப்பரை மடித்து வீட்டு பூஜை அறையிலோ அல்லது பீரோவிலோ வைத்துவிடலாம். எப்பொழுது வேண்டுதல் நிறைவேறுகிறதோ அப்பொழுது இதை கற்பூரத்தை பயன்படுத்தி எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கரைத்து செடிகளில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை நீக்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய அற்புதமான இந்த மேஜிக் நாள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதால் இந்த நாளை முழுமையாக பயன்படுத்தி தேவதையின் அருளால் வேண்டுதலின் நிறைவேற்றிக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -