- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனதளவில் பயம் இருக்கும். புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பதட்டத்தோடு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள். நிச்சயம் மனதில் இருக்கும் பயம் நீங்கும். மனம் தெளிவு பெறும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட நாள் தடையாக இருந்து வந்த காரியங்கள் எல்லாம் இன்று வெற்றி பெறும். காரியத்தடை விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். ஒரு விஷயத்தை முயற்சி செய்த உடனேயே வெற்றி கிடைக்காது. சில போராட்டகள், சில எதிர்ப்புகளை மீறி தான் இன்று உங்களால் ஜெயிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு பணம் கடன் வாங்க வேண்டாம். புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்ற சுகமான வாழ்வுதான். உங்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும். நீண்ட நாள் மனக்குழப்பம் தெளிவு பெறும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரிய பாதிப்புகள் வராது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் மீண்டும் நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் மன நிறைவு உண்டாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரப் போகிறது. எந்த இடத்தில் உங்களுடைய சுயமரியாதையை இழந்தீர்களோ, அதே இடத்தில் சுயமரியாதையை திரும்பவும் மீட்டு எடுப்பீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். பெரிய அளவில் சாதனை படைக்க இந்த நாள் உங்களுக்கு உதவி செய்யும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மனது பக்குவப் படும். எதிரிகளை கூட மனதார மன்னித்து விடுவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவும் கொஞ்சம் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். பல நாட்களாக மக்கு என்று பெயர் வாங்கியவர்கள் கூட, இன்று திறமைசாலியாக வலம் வரப்போகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிரம்ப சந்தோஷம் இருக்கும். உற்சாகம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். தேவையில்லாத சந்தேகங்கள் மனதில் இருந்து விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையில் எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று நடக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சீரான போக்கு நிலவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதை தைரியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு பயந்து போகக்கூடாது. துக்கத்தை கண்டு துவண்டு போகக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காரிய தடை விலகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றவர்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மன நிறைவு அடைவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். வாழ்க்கை துணைக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். மன நிறைவு அடைவீர்கள்.

- Advertisement -