- Advertisement -
ஜோதிடம்

12 ராசிகளின் சக்திகள்

- Advertisement -

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் தனிப்பட்ட விதத்தில் இருக்கும். குறிப்பிட்ட அந்த ராசி தனக்கு உரிய இந்த சக்தியை பயன்படுத்தினால், அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்களை காணலாம். தனக்குரிய சக்தி என்ன? என்பதை அறியும் வரை தான் மனிதன் போராடுகிறான். அதன் பிறகு இந்த போராட்டத்திற்கான பலனை அனுபவிக்க தொடங்குகிறான், ஆனால் அதற்குள் சிலருக்கு காலம் முடிந்து போயிருக்கும். 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு உரிய சக்தி என்ன? என்பதை இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் குறிக்கோளுடன் இருப்பார்கள். மற்ற ராசியினரை விட உங்களுடைய குறிக்கோளின் மீது நீங்கள் செலுத்தும் தீவிரமான அந்த பக்தி தான் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். அதுவே சில சமயங்களில் உங்களை சோர்வடையவும் செய்யலாம். மனம் தளராமல் உங்கள் குறிக்கோளை சக்தியாக கொண்டு போராடுங்கள் வெற்றி நிச்சயம்.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ராசியின் சின்னம் காளையை போலவே யாராலும் தங்களை அடக்கி ஆள முடியாது என்பது தான் இவர்களின் சக்தியாக இருக்கும். உங்களை அடக்கி ஆள நினைத்தால் நீங்கள் யார் என்பதை அவர்களுக்கு காண்பித்து விடுவீர்கள். அன்பு ஒன்றுக்கு தான் ரிஷபம் அடிமையாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் வேகம் மற்றும் விவேகமானவர்கள். எல்லோரையும் விட செயலிலும், சிந்தனையிலும் வேகமுடன் இருக்கும் உங்களுக்கு, இது தான் சக்தியாக மாறும். உங்கள் வேகத்தை பயன்படுத்தி முன்னேற பாருங்கள்.

- Advertisement -

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் யாராலும் பரிணமிக்க முடியாத சக்தி கொண்டுள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய வளர்ச்சியில் முன்னேற்றத்தை கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். யார் சொல்லும் கேட்காமல் மனம் சொல்வதை கேளுங்கள். காலநிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி எடுக்கும் முடிவுகள் உங்களின் சக்தியாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதாக மயக்கி விடக்கூடிய சக்தி கொண்டவர்கள். யாரையும் எப்படியும் பேச்சால் வசியப்படுத்தி விடுவீர்கள். ஜகஜால கில்லாடி சக்தியை கொண்டு இந்த ஜகத்தையும் ஆளக்கூடிய யோகம் கொண்டவர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எதையும் அலசி ஆராய்ந்து விடக்கூடிய சக்தியை கொண்டுள்ளீர்கள். சிறு துரும்பும் உங்கள் பார்வையில் இருந்து தப்புவதில்லை. உண்மையை அலசுவதில் கில்லாடியாக இருக்கும் உங்களின் இந்த சக்தியை விரயம் செய்யாதீர்கள், சரியாக பயன்படுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் போல யாராலும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியாது. இதுதான் அவர்களின் மாபெரும் சக்தியாக இருக்கும். இடங்களுக்கு ஏற்றார் போல, மனிதர்களுக்கு ஏற்றார் போல தங்களை தாங்களே மாற்றிக் கொண்டு எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்யாமல், திட்டமிட்டு செயல்பட்டால் உங்களுடைய சக்தி வெற்றியாக மாறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதாக உணர்ந்து கொள்ளும் சக்தி கொண்டவர்கள். இவர்களைப் போல யாராலும் புரிந்து கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்க முடியாது. உணர்தல் என்னும் சக்தி விருச்சிக ராசிக்காரர்களின் மாபெரும் வெற்றியாகும்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களின் மிகப்பெரிய சக்தி அவர்களுடைய தைரியம் தான். வருவது வரட்டும் எதையும் ஒரு கை பார்ப்போம் என்னும் உங்களுடைய தைரியம் பல விஷயங்களில் உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கும். துணிந்தவர்களுக்கு தோல்வி என்பது இல்லை. உங்களுடைய தைரியத்தை முறையாக பயன்படுத்துங்கள்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சிறந்த வேலைக்காரர்கள். எதை செய்தாலும் அதை திறம்பட செய்து சாதிக்க பிறந்தவர்கள். யாராலும் செய்ய முடியாததை நீங்கள் எளிதாக செய்து விடுவீர்கள். உங்களுடைய சக்தியை புரிந்து கொண்டு முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்தையும் நேரடியாக உடைத்து பேசி விடுவார்கள். எதையும் மனதிற்குள்ளே வைத்துக் கொள்ளாத உங்களுடைய இந்த சக்தி பல இடங்களில் கெட்ட பெயரை கொடுத்திருந்தாலும் அதிலிருந்து கற்றதை மாறாதீர்கள். வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று மனதில் பட்டதை நேரடியாக பேசி வெற்றி காணுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தேய்க்காமல் பூஜை பொருட்கள் பளபளக்க

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களை போல யாராலும் மற்றவர்களை நேசிக்க முடியாது. அப்பழுக்கற்ற இவர்களின் இதயம் மிகவும் பலமானது. இவர்களை வீழ்த்துவது கடினமான செயலாகும். உங்களின் குணம் தான் உங்களுடைய சக்தி. யாரையும் வெறுக்காதீர்கள், தொடர்ந்து நேசியுங்கள்.

- Advertisement -