- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்தேய்க்காமல் பூஜை பொருட்கள் பளபளக்க

தேய்க்காமல் பூஜை பொருட்கள் பளபளக்க

- Advertisement -

பூஜை பொருட்கள் சுத்தம் செய்வதற்கு இனி அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. சாதாரணமாக கிடைக்கும் இந்த ஒரு பொருளை தண்ணீரில் சேர்த்து பூஜை பொருட்களை ஊற வைத்தால் போதும், பூஜை பொருட்கள் 20 நிமிடங்களில் பளபளன்னு பளிச்சென புதுசு போல மாறிவிடும். பித்தளை மற்றும் செம்பு பூஜை பாத்திரங்களை எப்படி எளிதாக சுத்தம் செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு முன்பு முதலில் விளக்குகளில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கை டிஸ்யூ அல்லது நியூஸ் பேப்பரை பயன்படுத்தி நீக்கிவிட வேண்டும். எண்ணெய் பிசுக்குடன் இந்த தண்ணீரில் சேர்க்கும் போது அவ்வளவாக பலன்கள் இருக்காது. எண்ணெய் பிசுக்குகளை டிஸ்யூ கொண்டு அகற்றிவிட்டு, மஞ்சள் குங்கும பொட்டுகளை அகற்றுங்கள். ஈர துணி அல்லது டிஷ்யூ பேப்பரை ஈரம் செய்து மஞ்சள், சந்தன, குங்குமம் பொட்டுகளை சுத்தமாக நீக்கி விடுங்கள்.

- Advertisement -

எல்லா பொருட்களையும் இதே போல சுத்தம் செய்துவிட்டு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜை பொருட்களின் அளவிற்கு ஏற்ப ஒன்றிலிருந்து இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஐந்தாறு பூஜை பாத்திரங்கள் தான் இருக்கிறது என்பவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரிலேயே இதனை சுத்தம் செய்து விடலாம். மேற்கொண்டு நிறைய பாத்திரங்கள் இருக்கிறது என்பவர்கள், ரெண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த ஒரு பொருளை சேர்க்க வேண்டும். அதற்கு மேலே தண்ணீர் சேர்ப்பவர்கள் அதற்கேற்றார் போல இந்த ஒரு பொருளையும் கூடுதலாக சேர்த்துக் கொள்வது நல்லது. ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நீங்கள் சேர்க்க வேண்டிய இந்த ஒரு பொருளின் பெயர் “லெமன் சால்ட்”. லெமன் சால்ட் எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கப் பெறுகிறது. ஒரு ஸ்பூன் அளவுக்கு நன்கு கலந்து கரைந்ததும் நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக அதனுள் போடுங்கள்.

- Advertisement -

20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். பாத்திரத்தில் எல்லா இடங்களிலும் அந்த தண்ணீர் படும்படி இருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்து பார்த்தால் நாம் கைகளால் தேய்த்து சுத்தம் செய்தது போல அவ்வளவு பளிச்சென பளபளன்னு மின்னும். இது அன்றாட பூஜை பொருட்கள் சுத்தம் செய்யும் பொழுது எளிதாக பலன் தரும். நீண்ட நாள் ரொம்பவும் கறுத்து போயிருந்தால் ஒரு ஸ்பூன் லெமன் சால்ட் உடன், அரை ஸ்பூன் டிஷ் வாஷ் லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மார்கழியில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு

பின்னர் இதே போல ஊற வைத்து எடுத்து லேசாக ஸ்க்ரப்பர் அல்லது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கென்றே வைத்திருக்கும் டூத் பிரஷ் கொண்டு தேய்த்துக் கொள்ளுங்கள். அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. பூஜை பொருட்கள் அத்தனையும் புதுசு போல பளபளவென்று ஜொலிக்கும். காமாட்சி அம்மன் விளக்கு, கஜலட்சுமி விளக்கு, வேலைப்பாடுகள் அதிகம் உள்ள குத்துவிளக்குகள் போன்ற விளக்குகளை சுத்தம் செய்யும் பொழுது இடுக்குகளில் எல்லாம் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டி இருக்கும். இப்படி ஊற வைத்து லேசாக டூத் பிரஷ் கொண்டு தேய்த்தாலே போதும் பளிச்சென மின்னும், ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்