- Advertisement -

14-12-2024 பூஜை அறையில் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

வழக்கமாக திருக்கார்த்திகை தீபமும், பௌர்ணமி திதியும், ஒன்றாக சேர்ந்து தான் வரும். ஆனால் இந்த வருடம் 13.12.2024 அதாவது நேற்றைய தினம், வெள்ளிக்கிழமையே திரு கார்த்திகை தீப திருநாளானது நிறைவடைந்துவிட்டது. இன்று 14.12.2024 மாலை 4:45 மணி அளவில் தான் பௌர்ணமி திதியானது, ரோகிணி நட்சத்திரத்தில் பிறக்கவிருகின்றது.

இந்த அற்புதம் வாய்ந்த நாளில் நம் வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான மகாலட்சுமி பூஜையை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்று மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபாட்டை மேற்கொள்வீர்கள். ஏனென்றால் என்று கார்த்திகை தீபத்தின் இரண்டாவது நாள்.

- Advertisement -

பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு இன்றைய தினம், கார்த்திகை தீபம் மூன்றாவது நாளாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்திருந்தாலும் சரி, அல்லது வெள்ளிக்கிழமை தான் தீபம் ஏற்ற துவங்கினார்கள் என்றாலும் சரி, எந்த பிரச்சனையும் கிடையாது. இன்று மாலை வழக்கம் போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள்.

நிலை வாசலில் அழகாக கோலம் போட்டு தீபம் ஏற்றி விடுங்கள். பிறகு பூஜை அறையில் மகாலட்சுமி தேவிக்கு முன்பாக இந்த பிரத்தியேக தீபத்தை ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக ஆந்தையோடு ஒரு அதிர்ஷ்ட லட்சுமி இருப்பார்கள் அல்லவா, அந்த அதிர்ஷ்ட லக்ஷ்மி மனதில் நினைத்து தீபத்தை ஏற்றினால் பல மடங்கு பண வரவு நமக்கு இருக்கும்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில், பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் பஞ்சகவ்ய விளக்கு கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பஞ்சகவ்ய விளக்கு என்பது பசுமாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் செய்யப்பட்ட விளக்கு. மகாலட்சுமியின் மொத்த அம்சமும் பொருந்திய இந்த விளக்கை இன்று மாலை வீட்டில் ஏற்ற வேண்டும்.

ஒரு மண் அகல் விளக்கு மேலே இந்த பஞ்சகவ்ய விளக்கை வைத்து, சுத்தமான பசு நெய் ஊற்றி, பஞ்சி திரி போட்டு மகாலட்சுமி முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை அனைத்தும் நீங்கும். வீட்டில் வருமானம் பெருகும்.

- Advertisement -

அதாவது கணவருக்கு வருமானம் இல்லை, பிள்ளைக்கு நல்ல வேலை இல்லை என்று சொல்லக்கூடிய வீடுகளில், குடும்பத் தலைவி இந்த வழிபாட்டை இன்றைய தினம் மேற்கொண்டால் அவ்வளவு சிறப்பு. உங்களுடைய கஷ்டங்களுக்கு 48 நாட்களில் ஒரு தீர்வு கிடைக்கும். பெரிய கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள் இந்த விளக்கை ஏற்றினால், அடுத்த 48 நாளில் உங்கள் கடனை அடைக்க ஒரு வழி நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆசைகள் நிறைவேற நினைத்தது நடக்க கார்த்திகை பௌர்ணமி வழிபாடு

மிக மிகக் குறைந்த விலையில் தான் இந்த பஞ்சகவ்ய விளக்கு கடைகளில் விற்கிறது. தவறாமல் வாங்கி இதை வீட்டில் ஏற்றி வையுங்கள். இந்த விளக்கை ஏற்றி வைத்த பிறகு தீபத்தை குளிர வைக்க கூடாது. அந்த நெருப்பு பஞ்சகவ்ய விளக்கில் பிடித்து, இது ஒரு ஹோமம் போல உங்கள் வீட்டில் எறியப்பட வேண்டும். இந்த எளிமையான சூட்சம வழிபாடு உங்களுடைய வீட்டில் இருக்கும் வறுமையை தீர்க்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by